பாஜக வேட்பாளர் மீது தாக்குதல், போராட்டத்தில் குதித்த தமிழிசை: 4 அதிமுகவினர் மீது வழக்கு
சென்னை: சென்னையில் பாஜக வேட்பாளரை தாக்கியது தொடர்பாக அதிமுகவினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் க. சுரேஷ் சூளைமேட்டில் உள்ள அன்னை சத்யா நகரில் வெள்ளிக்கிழமை இரவு பூத் சிலிப் வழங்கியுள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து பூத் சிலிப் வழங்கியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவினர் சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்க பதிலுக்கு அவர்களும் தாக்கினார்களாம்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இது பற்றி தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு வந்து பாஜகவினரை சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதியளித்த பிறகே பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் பாஜகவினர் அளித்த புகாரின்பேரில் அதிமுக நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்.(40), ஏழுமலை(30), சீனிவாசன்(20) மற்றும் சுரேஷ்(28) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications