"தியாக செம்மல்" - திஹார் தினகரனுக்கு அதிமுகவினர் தந்த பட்டம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு
திஹார் சிறை சென்று திரும்பியுள்ள டிடிவி தினகரனுக்கு தியாகச் செம்மல் என்ற பட்டத்தை சூட்டியிருக்கிறார்கள் அதிமுகவினர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் டி.டி.வி., தினகரனுக்கு தியாக செம்மல் பட்டம் குறித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவில் சின்னம்மா, அம்மாவின் ஆளுமையே என்றெல்லாம் சசிகலாவை அதிமுகவினர் அழைத்து வந்தனர். இதேபோல் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு 'சின்னத்தாய்' பட்டம் சூட்டி அழகுபார்த்தனர் அதிமுகவினர். அந்தவகையில் டிடிவி தினகரனுக்கு தியாகச் செம்மல் பட்டம் கொடுத்துள்ளனர் கன்னியாகுமரி அதிமுகவினர்.

தினகரனு்க்கு தியாக செம்மல் பட்டம் வழங்கி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், இரட்டை இலை சின்னத்திற்காக சிறை சென்று திரும்பியுள்ள அதிமுக கழக துணை பொது செயலாளர் டி.டி.வி., தினகரன் அவர்களே, கழக பணியும் மக்கள் பணியும் செய்ய வாருங்கள் என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி, கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் காரவிளை செல்வன், டி.டி.வி., தினகரன் பேரவை மாவட்ட அமைப்பாளர் சங்கர், வக்கீல் அணி இணை செயலாளர் முருகேஸ்வரன் ஆகியோர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் அண்ணாதுரை, எம்,ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இபிஎஸ், தளவாய் சுந்தரம், தமிழ் மகன் உசேன், நாஞ்சில் சம்பத், மாஜி அமைச்சர் பச்சைமால் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுருந்தன.
இருப்பினும் மாவட்ட செயலாளர் மற்றும் மேல்சபை உறுப்பினருமான விஜயகுமார் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மாவட்ட செயலாளர் மீது புகார் கூறியவர்கள் டி.டி.வி., தினகரனை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. டி.டி.வி., தினகரனுக்கு தியாக செம்மல் பட்டம் குறித்து அதிமுக வினர் ஒட்டியுள்ள போஸ்டர் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்மன செம்மலுக்கு போட்டியாக தியாக செம்மல் பட்டம் போஸ்டர் அதிமுக வினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications