'அம்மா' மீண்டும் முதல்வர் ஆக வேண்டி அதிமுக நிர்வாகி தற்கொலை
திருச்சி: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுக நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
திருவாரூரில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி ராமநாதன்(35). அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு சென்று அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துள்ளார். இரவில் அவர் நெடுநேரமாகியும் அறைக் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அறை கதவை திறந்து பார்த்தபோது ராமநாதன் இறந்து கிடந்தார்.

உடனே இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்தவுடன் கன்டோன்மென்ட் போலீசார் ஹோட்டலுக்கு வந்து ராமநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் அருகே விஷ பாட்டில் கிடந்தது.
ராமநாதனின் சட்டைப் பையில் கடிதம் ஒன்று இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது,
என் இறப்புக்கு யாரும் காரணமில்லை. மேலும், மக்கள் முதல்வர் அம்மா எனது குடும்பத்தினரை அழைத்து, என் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டும்
எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும், அம்மா மீ்ண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது எனது ஆசை. எனது
உடலில் கட்சிக் கொடியைப் போர்த்தி சொந்த ஊரில் தகனம் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதனின் மரண செய்தியை அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
அதிமுக தலைமையின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டு எனக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர் 4-வது வார்டைச் சேர்ந்த என்.ராமநாதன் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தியறிந்து மனம் துடித்தது.
கட்சித் தொண்டர்கள் உணர்ச்சிவசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். ராமநாதனை இழந்து வாடும் அவர் குடும்பத்துக்கு
என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதி உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications