கொந்தளிப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு செப்.12ல் கூடுகிறது- வீடியோ
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிமுக அம்மா அணியும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் இணைந்ததையடுத்து தினகரன் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தினகரன் தரப்புக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும், தினகரன் ஸ்லீப்பர் செல்களாக தன்னுடைய ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளதாக கூறி வருகிறார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்த பின்பு இரு தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்றும் அதுதொடர்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும் எனவும் அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொது செயலாளர் தினகரன் ஆகியோர் நீக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications