இன்று கூடுகிறது அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு… இடைத் தேர்தலில் ஜெ. போட்டி குறித்து அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அ.தி.மு.க. வின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்றைய அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பட்டியலும் இன்று வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 5ம் தேதி ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும், 21ம் தேதி ஒருநாள் மட்டும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் இன்னும் தங்கள் முடிவுகளை அறிவிக்காத நிலையில், அ.தி.மு.க. வினர் அத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
