அதிமுக ஊழலில் ஊறித் திளைத்த கட்சி - விஷன் இந்தியா பொன்ராஜ் குற்றச்சாட்டு: வீடியோ
அதிமுக அரசு ஊழலில் ஊறித் திளைத்த அரசு என்பதால்தான் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என விஷன் இந்தியா கட்சி தலைவர் பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக ஊழலில் ஊறித் திளைத்த அரசு என்பதை மக்கள் அறிவார்கள். இன்னும் யாருக்கு என்ன அமைசரவை என்ற தள்ளாட்டத்திலும் பேரத்திலும் தான் ஆளும் கட்சி இருக்கிறது என விஷன் இந்தியா கட்சியின் தலைவர் பொன்.ராஜ் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியின் ஆட்சித் திறன், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆளும் கட்சி என பல விஷயங்கள் குறித்து ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு தற்போது அசாதாரணமான சூழ்நிலையில் உள்ளது. மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று உயிருடன் இல்லை.
ஜெயலலிதா தமிழகத்துக்கு மிகச் சிறந்த தொலைநோக்குத் திட்டத்தை கொடுத்துச் சென்றுள்ளார். தொலைநோக்கு பார்வை 2023 என்ற அந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடிய அரசாக இப்போதைய அரசு இல்லை. இன்றைய ஆளும் கட்சி, மோடியின் கைப்பாவையாக மாறிச் செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது.

தமிழக அரசை இதற்கு பாராட்டலாம்!
ஆளும்கட்சி சில நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். ஆறு, ஏரி, குளங்களைத் தூர் வாருவது, வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் செல்லலாம் என்கிற அறிவிப்பு, கல்வித்துறையில் சில சீர்திருத்தங்கள் என சில திட்டங்களைச் செய்துள்ளது. அதைப் பாராட்டலாம்.

ஊழலில் ஊறித் திளைத்த அரசு
ஆனால் அதிமுக அரசு, இந்த நாண்கு ஆண்டுகளில் எப்படி பெயர் எடுக்கப்போகிறது என தெரியவில்லை. மக்கள் மத்தியில் அதிமுக என்பது ஊழலில் ஊறித்திளைத்த அரசு என்ற எண்ணம் உள்ளது. ஊழலில் ஊறித்திளைத்த காரணத்தினால்தான், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறதோ என்கிற எண்ணத் தோன்றுகிறது.

மத்திய அரசின் கைப்பாவையா?
இனிமேலும் மத்திய அரசின் கைப்பாவையாக இல்லாமல் தொலைநோக்கு பார்வை 2023ல் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அதை செயல்படுத்தும் அரசாக ஆளும் கட்சி செயல்பட வேண்டும். விவசாயம்,தொழில் துறை, தமிழக நதிநீர் இணைப்பு ஆகியவற்றை அதிமுக அரசு செய்ய வேண்டும்.

மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படுமா?
ஆனால் திமுக அரசு தள்ளாட்டத்தில் இருக்கிறது. இன்னும் யாருக்கு எந்த அமைச்சரவை என்ற பேரத்தில்தான் அதிமுக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களுக்கான பிரச்சனைகளைத் தீர்க்கும் அரசாக அது இல்லை. மக்கள் பிரச்சனைகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டும்.
ஜெயலலிதாவுக்காகத்தான் ஓட்டு
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலதிமுகவுக்கு 39 எம்.பிக்களை மக்கல் கொடுத்தார்கள். அவர்கள் ஜெயலலிதாவை நம்பித்தான் வாக்களித்தார். ஆனால் மக்கள் ஒருபோதும் நம்பவில்லை. தமிழக அரசின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு பாராளுமன்றமே ஸ்தம்பிக்கும் வகையில் தமிழக எம்.பிக்கள் போராட்ட வேண்டும். மக்களுக்காக போராடவிட்டால் மீண்டும் தேர்தல் வரும். அந்த நிலையை இவர்கள் தான் ஏற்படுத்துகிறார்கள், இவ்வாறு பொன்ராஜ் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications