எதிர்ப்புகளை சரிகட்டி மதுசூதனன் வேட்பாளராக அறிவிப்பு... அதிமுக ஆட்சிமன்றக் குழு முடிவு!
அதிமுகவின் ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சி மன்றக் குழு கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.
Recommended Video

சென்னை : அதிமுகவின் ஆர்கே நகர் தொகுதி வேட்பாளராக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் இந்த முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அவைத் தலைவர் மதுசூததன் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விருப்பம் தெரிவித்தது. ஆனால் இதற்கு முதல்வர் பழனிசாமி தரப்பில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விருப்ப மனு அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இது வரை மதுசூதனன், கோகுல இந்திரா, பாலகங்கா உள்ளிட்டோர் இந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிகிறது. மொத்தம் 27 பேர் விருப்பமனுக்களை அளித்திருந்த நிலையில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு கூடி ஆலோசித்தது.

ஆட்சி மன்ற கூட்டம்
ஆட்சி மன்றக் குழுவில் ஏற்கனவே உள்ள 7 பேருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி உள்ளிடோர் ஆட்சி மன்றக் குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வளர்மதி, அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2 மணி நேரம் ஆலோசனை
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசைக்குப் பிறகு அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தி மதுசூதனனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆர்கே நகர் தொகுதியில் மதுசூதனன், தினகரன், மருதுகணேஷ் உள்ளிட்டோருக்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மதுசூதனன்
அதிமுக இரு அணிகளாக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அணியை ஆதரித்த மதுசூதனன், அதிமுகவின் அவைத்தலைவராக 2 வது முறையாக தொடர்ச்சியாக இருந்து வருகிறார். 1991ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அரசில் கைத்தறித்துறை அமைச்சராகவும் மதுசூதனன் இருந்துள்ளார்.

மூத்த நிர்வாகி மதுசூதனன்
அதிமுகவில் அமைப்புச் செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை மதுசூதனன் வகித்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகியான இவர் ஆர்கே நகர் தேர்தலில் எவ்வளவு வாக்குகள் பெறப்போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications