அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுத்திருந்தால் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும்- நடிகர் ஆனந்தராஜ்
தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது அதிமுகவினராக இருந்தால் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என நடிகர் ஆனந்த் ராஜ் நம்பிக்கை தெரிவித்தார். வயதின் மீதான அன்பின் காரணமாக கருணாநிதியை சந்திப்பேன் என்றும் அவர் கூ
சென்னை: கொலை மிரட்டல் விடுத்தது அதிமுகவினராக இருந்தால் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என நடிகர் ஆனந்த் ராஜ் நம்பிக்கை தெரிவித்தார். வயதின் மீதான அன்பின் காரணமாக கருணாநிதியை சந்திப்பேன் என்றும் அவர் கூறினார்.
அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரான ஆனந்த்ராஜ் அண்மையில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சி தலைமையாக சசிகலாவை ஏற்க மறுத்து அவர் கட்சியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்கு தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக ஆனந்த் ராஜ் போலீஸில் புகார் அளித்தார். இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ஆனந்த் ராஜ் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வீட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக தொலைபேசியில் பேசியவர்கள் மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் அதிமுக தொண்டர்களாக இருக்கமாட்டார்கள் என்று அவர் கூறினார். அப்படி அதிமுக தொண்டர்கள் தான் கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்றார் கட்சி தலைமை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போதைக்கு அரசியல் திட்டம் இல்லை என்று கூறிய ஆனந்த் ராஜ், சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பீர்களா என்ற செய்தியாளர்களின கேள்விக்கு பதில் அளித்த அவர் வயதின் மீதான அன்பின் காரணமாக அவரை சந்திப்பேன் என்று நடிகர் ஆனந்த் ராஜ் கூறினார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications