அதிமுக வேட்பாளர் மீது அதிமுக பிரமுகரே புகார்.... வீட்டைக் காலி செய்ய சொல்லி மிரட்டுவதாக!

நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் கே.ஆர்.பி. பிரபாகரன். இவர் மீது ஆலங்குளத்தை அடுத்துள்ள பெத்தநாடார்பட்டியை சேர்ந்தவர் கலிங்கராயன் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். இவர் முன்னாள் அதிமுக பொறுப்பாளர் ஆவார்.
இவர் தனது மனைவி பூவம்மாள் மற்றும் இருமகன்கள் ஆகியோருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் தாங்கள் கீழப்பாவூரில் அரிசி வியாபாரம் செய்து வந்ததாகவும்,அபோது தங்களுக்கு சொந்தமான வீட்டை முருகன் என்பவரிடம் அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தோம்.
இதுதொடர்பாக தென்காசி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததாகவும் அந்த வழக்கை தனது சார்பில் பிரபாகரனிடம் நடத்த சொன்னதாகவும், உரிய நேரத்தில் வாங்கிய கடனை செலுத்திய நிலையில் எனது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முருகனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தனது வீடு ஏலம் போனதகவும் ,தற்போது வீட்டை காலி செய்ய கூறி மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார்.
புகாரை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், நெல்லை மாவட்ட எஸ்.பி.,விசாரணைக்கு அனுப்பிவைத்தனர். இந்த புகார் குறித்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரன் கூறுகையில், 2006ல் நடந்ததாக கூறப்படுவது அனைத்தும் தவறான தகவல். எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை கிடைத்ததை பொறுத்துக்கொள்ளாத சிலர் மேற்கொள்ளும் செயலாகும் .
நான் சிவில் வழக்குகளில் ஆஜராக மாட்டேன். கட்சிக்காரர் என்ற முறையில் கலிங்கராயன் வழக்கை வேறு ஒரு வக்கீலிடம் கூறி நடத்த சொன்னேன். இதற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications