சபலத்தில் இருக்கும் திமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை: 'ஆபரேசன் அம்மா'விடம் சிக்கப் போவது யார்?
சென்னை: சட்டசபையில் பலமான எதிர்கட்சியாக உள்ள திமுகவை உடைத்து சில எம்.எல்.ஏக்களை தங்களின் ஆதரவாக திருப்ப அதிமுக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபையில், இதுவரை இல்லாத அளவுக்கு, தி.மு.க., 89 எம்.எல்.ஏ.,க்களுடன், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், கட்சிகளின் எண்ணிக்கை குறைவு என்பதாலும், தி.மு.க., உறுப்பினர்கள் சட்டசபைக்கு உள்ளே, ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.
ஒரு கட்டத்தில், ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதை கண்டித்து, சட்டசபை வளாகத்தில், தி.மு.க எம்.எல்.ஏக்கள் நடத்திய தர்ணா போராட் டம், போட்டி சட்டசபை கூட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சட்டசபை நடந்த 36 நாட்களில் சட்டசபையில் தி.மு.க.வினர் எழுந்து நிற்பது-கேள்விகள் கேட்பதெல்லாம் சேனல்களில் ஒளிபரப்பாகி மக்களின் கவனத்திற்கு சென்றது.
கடைசி நாளில் நடந்த விவாதத்தின் போது, காவலர்களுக்கு குடியிருப்பு கட்டுவது பற்றி பேச தி.மு.க,வுக்கு அருகதை கிடையாதுன்னு என்று ஜெயலலிதா சொல்ல, அதற்கு பதிலடியா, அதே வகையிலான வார்த்தையை ஸ்டாலினும் சொன்னாரு. ஆனால் ஸ்டாலின் சொன்ன வார்த்தை மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

முதல்வரை பேச விடாத திமுகவினர்
முதல்வர் பேசியதையும் நீக்கவேண்டும். அவரது பேச்சை அனுமதித்தால், எதிர்க்கட்சித் தலைவர் பேசியதையும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் 45 நிமிடங்கள் விடாமல் அமளி செய்தார்கள். ஜெயலலிதா பதில் சொல்ல எழுந்து நின்ற பின்னும், கடைசி வரை அவரை பதில் சொல்லவே விடவில்லை.

சட்டசபையில் வலுவான திமுக
நிலைமையை சமாளிக்க முடியாமல் போன சபாநாயகர், கடைசியா சிறுவாணி அணை தொடர்பான தனித் தீர்மானத்தை முதல்வர் நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுங்கன்னு கேட்டதும், ஸ்டாலின் உத்தரவுப்படி தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமைதியாகி, தீர்மானம் நிறைவேற ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதன்பின்னர் சிறுவாணி அணைக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

திமுகவை உடைக்க திட்டம்
சட்டசபையில் தான் பேச நினைத்ததை பேச முடியவில்லையே என்ற கோபம் ஜெயலலிதாவிற்கு இருக்கிறதாம். வலிமையான எதிர்கட்சியாக உள்ள திமுகவை உடைத்து வலிமையை குறைக்க அசைன்மெண்ட் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பக்கம் சாய தயாராக உள்ள திமுக எம்.எல்.ஏக்கள் யார் யார் என்ற லிஸ்ட் தயாராகி வருகிறதாம்.

சபலிஸ்ட்டுகளுக்கு வலை
அ.தி.மு.க.வில் இருந்து அதிருப்தியடைந்து தி.மு.கவுக்கு பெரிய கனவோடு போய், இப்ப எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள், மனரீதியா சபலத்தில் இருப்பதாகவும், முதலில் அவர்களின் பக்கம் வலையை வீசலாம் என்று ஐடியா கொடுத்திருக்கிறதாம் உளவுத்துறை.

தலைநகர எம்.எல்.ஏக்கள்
தலைநகர் சென்னையில் வலுவான நிலையில் உள்ளது திமுக. இதில் ஆளும்கட்சிக்கு விசுவாசியாக இருந்து பின்னர் திமுகவிற்கு சென்ற மாவட்ட செயலாளர் பதவியை பெற்று இப்போது எம்.எல்.ஏவாக உள்ளவரை வளைக்க முதல் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
அந்த எம்.எல்.ஏவின் சொந்தபந்தங்கள் மூலமா பேசினால் அவர் வந்து விடுவார் என்கின்றனர்.

தென்மாவட்ட எம்.எல்.ஏக்கள்
தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் அதிமுக ஆதரவு நிலைக்குத் திரும்ப தயாராக இருக்கிறார்களாம். அதில் முக்கியமானவர் முருகப்பெருமானின் தொகுதியில் நின்று வென்றவராம். அதே போல நீண்ட இன்சியலுக்குச் சொந்தக்கார எம்.எல்.ஏவாம் அவருக்கும் குறி வைக்கப்பட்டுள்ளதாம்.

வீசும் வலையில் சிக்குமா சிதறுமா?
கடந்த முறை தேமுதிக எம்.எல்.ஏக்கள் 10பேர் அதிமுக ஆதரவு நிலையை எடுத்தார்கள். சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டனர். அவர்களின் நிலை என்னவானது என்பது இப்போது பலருக்கும் தெரியும்.

ஆபரேசன் அம்மா
அம்மா ஆபரேசனில் திமுக எம்.எல்.ஏக்கள் சிக்குவார்களா? வலையில் சிக்காமல் நழுவிவிடுவார்களா? அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதால் நடக்கும் வேடிக்கையைப் பார்க்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications