கடவுளை மனிதன் தண்டிப்பதா?: குன்ஹாவை வறுத்தெடுக்கும் அதிமுகவினர்
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் குன்ஹாவை கண்டித்தும், விமர்சித்தும் அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் அதிமுகவினர் குன்ஹாவை கடுமையாக விமர்சித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். மேலும் ஆங்காங்கே கண்டன பேனர்களும் வைத்துள்ளனர்.

கடவுள்
ஒரு போஸ்டரில், கடவுளை ஒரு மனிதன் எப்படி தண்டிக்கலாம் என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

பீனிக்ஸ் பறவையே
போயஸ் கார்டனில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், குருட்டு தீர்ப்பு! கூறுவதே உலகம்! பீனிக்ஸ் பறவையே!! பீறிட்டு வா! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராசக்தி அம்மாவுக்கு எதிராக மைக்கேல் குன்ஹா
இந்துக்களின் இதய தெய்வம், இந்து மக்களின் பராசக்தி அம்மா அவர்களுக்கு எதிராக மைக்கேல் குன்ஹா என்னும் மத வெறி பிடித்தவர் எழுதிய தீர்ப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு இந்து மகாசாபா போஸ்டர் ஒட்டியுள்ளது

நீதி தேவதைக்கே
தர்மத்தின் வாழ்வு தனை சூதுகவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும். நீதி தேவதைக்கே தண்டனையா, வேதனை! வேதனை! கண்டிக்கிறோம்! என்று ஒரு போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள்
தீர்ப்பு வழங்கியதற்காக ஒரு நீதிபதியை இவ்வாறு விமர்சிப்பது தவறு என்று சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஜய்
விஜய்யின் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தமிழகத்தில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கித் தந்த பிரதமர் மோடி அவர்களுக்கும், நீதிபதி குன்ஹா அவர்களுக்கும் எங்கள் இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யே ஒதுங்கி இருந்தாலும் இப்படி ஏதாவது செய்து அவரை பிரச்சனையில் சிக்கிவிட்டுவார்கள் போன்று.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications