படுகர் சங்க கூட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்த அதிமுக எம்.எல்.ஏ கைது
ஊட்டி: ஊட்டியில் நடந்த இளம் படுகர் சங்க கூட்டத்திற்கு கோர்ட் தடையை மீறி நுழைய முயன்ற அதிமுக எம்.எல்.ஏ புத்தி சந்திரன் கைது செய்யப்பட்டார். மோதல் தொடர்பாக புத்திசந்திரனுடன் வந்த 29 பேரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
உதகமண்டலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் புத்தி சந்திரன். இவர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது அமைச்சர் பதவியை இழந்து விட்டார்.
இந்த நிலையில், இளம் படுகர் சங்கத்தின் செயற்குழு இன்று ஊட்டியில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வரக் கூடாது என்று ஏற்கனவே கோர்ட் புத்தி சந்திரனுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி கலந்து கொள்வதற்காக இன்று தனது ஆதரவாளர்கள் 29 பேருடன் கூட்டத்திற்கு வந்தார் புத்தி சந்திரன்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, மோதல் மூளும் சூழல் உருவானது. இதையடுத்து புத்தியையும், அவருடன் வந்தவர்களையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications