“அதிமுக மறுபடி வராது ஆட்சிக்கு”- எம்.எல்.ஏ மகனுக்கு ஊற்றிக் கொடுத்து பேச வைத்த “உயிர்” நண்பர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதாக எம்.எல்.ஏ மகன் ஒருவர் சொல்வதாக அவருக்கு மது ஊற்றிக் கொடுத்து சிலர் செய்த அட்டகாசம் பதிவான வாட்ஸப் வீடியோ பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும், தனது தந்தை சொந்தப் பணத்தை செலவு செய்தே எம்.எல்.ஏ ஆனார் என்றும், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மகன் சிவராம் பேசியுள்ளார். அவருக்கு மதுவினை ஊற்றிக் கொடுத்து சிலர் அவரைத் தூண்டிவிட்டு பேசச் செய்வது அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. தனது நண்பர்களுடன் மது அருந்தும்போது அவர்களே அவரைத் திசை திருப்பி பேசச் செய்து வீடியோ காட்சியினை எடுத்துள்ளனர்.

ADMK MLA Nanjil Murugesan's son Controversial talk about Jayalalitha

கடந்த 4 ஆம்தேதி அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் நாகர்கோவில் தொகுதியில் டான்சி சாம்சன் அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர் புதன்கிழமை வேட்பாளர்கள் பட்டியல் மாற்றத்தில் நாகர்கோவில் தொகுதியில் நாஞ்சில் முருகேசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது மகன் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வராது என பேசிய வாட்ஸப் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவருடன் கூட இருக்கும் நண்பர்களே அவரை மது போதையில் இது போல பேசச் செய்திருப்பது தெளிவாகத் தெரிவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+