தேர்தல் ஆணைய அங்கீகாரம் இல்லாத தினகரன் கட்சி பதவி தருவதா? எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் கலகக்குரல்
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத தினகரன் எனக்கு கட்சிப் பதவி தருவதா? என பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் கொந்தளித்துள்ளார்.
சென்னை: அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் பதவிக்கு தம்மை டிடிவி தினகரன் நியமித்ததை ஏற்க முடியாது என பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் 18 அமைப்பு செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை டிடிவி தினகரன் அறிவித்தார். எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கட்சி பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது.

எம்.எல்.ஏ எதிர்ப்பு
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே அதிமுக மகளிர் இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ள பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சத்யா பன்னீர்செல்வம் கூறியதாவது:

அங்கீகாரம் இல்லாத தினகரன்
தேர்தல் ஆணையத்தால் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என அங்கீகரிக்கப்படாதவர் டிடிவி தினகரன். அதிமுகவின் மகளிர் அணி இணை செயலராக தினகரன் என்னை நியமித்ததை ஏற்க முடியாது.

பதவி ஏற்க முடியாது
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் அரசு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆகையால் அதிமுக மகளிர் அணி இணை செயலர் பதவியை ஏற்கமாட்டேன்.
இவ்வாறு சத்யா பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கலகக் குரல் வெடிக்கும்
தீவிர அரசியலுக்கு திரும்பி வந்து அதிரடி காட்டிய தினகரனுக்கு நிச்சயம் இது பின்னடைவாகவே கருதப்படுகிறது. சத்யா பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து மேலும் பலரும் தினகரன் நியமனத்தை எதிர்த்து கலகக் குரல் எழுப்பலாம் என்றே கூறப்படுகிறது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் தவெகவில் இணைப்பு! குதிரை பேர கலாச்சாரம்! எடப்பாடி கண்டனம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications