மேலூர் அருகே சிறுமி பலாத்காரம்: டி.எஸ்.பி தலையிட்ட பின் 4 அதிமுகவினர் கைது

Subscribe to Oneindia Tamil

மேலூர்: மேலூர் அருகே தெற்குப்பட்டியில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுக பிரமுகர்களை நால்வரை கைது செய்துள்ளது காவல்துறை. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ஸ்டீபன், பாரதி, கார்த்திக், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாத்கார வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதில் எம்.எல்.ஏ சாமி பல்வேறு தடைகளை விதித்தார் என்ற புகார் எழுந்துள்ளது. சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த சம்பவம் பற்றி சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தோடு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஜெ.67வது பிறந்தநாள்

ஜெ.67வது பிறந்தநாள்

ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம்தேதி கொண்டாடப்பட்டது. மேலூர் காஞ்சிவனம் சுவாமி திடலில் 15,000 பேருக்கு பிரியாணி விருந்து போட்டார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாமி.

சிறுமி பலாத்காரம்

சிறுமி பலாத்காரம்

ஜெயலலிதா பிறந்த நாளில் சமையல் வேலை செய்வதற்கு சென்ற கருத்த புளியம்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாரதி என்ற காமுகன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். அவனோடு சேர்ந்து நண்பர்கள் மூவரும் அந்த மைனர் பெண்ணிடம் அத்துமீறியுள்ளனர்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

வேலைக்குப் போன இடத்தில் தனக்கு நேரிட்ட கொடுமையை வீட்டில் சொல்லி அழவே, அந்த சிறுமியின் தந்தை செல்வம் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகார் பதிய மறுப்பு

புகார் பதிய மறுப்பு

சிறுமியை சீரழித்த நால்வரில் இருவர் மேலூர் எம்.எல்.ஏ. சாமியின் உறவினர்கள் என்பதாலும், நால்வருமே ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அக்கட்சியின் முக்கிய பிரமுகரின் தலையீட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் போலீஸ் காலம் தாழ்த்தியதாக புகார் எழுந்துள்ளது.

மிரட்டிய ஆளுங்கட்சியினர்

மிரட்டிய ஆளுங்கட்சியினர்

மேலும் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியுள்ளனர் போலீசாரும், ஆளுங்கட்சியினரும். மசியாத சிறுமியின் பெற்றோரை, ரூ.6 லட்சம் தருகிறோம் என்று பேரம் பேசியுள்ளனர். ஆனாலும் உறுதியோடு இருந்து குற்றவாளிகளை கைது செய்ய போராடியுள்ளனர் சிறுமியின் ஏழை பெற்றோர்.

நால்வர் கைது

நால்வர் கைது

ஆனால், விவரம் தெரிந்து டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் மேற்கொண்ட அதிரடி உத்தரவுக்குப் பிறகுதான், வழக்கு பதிவு செய்து ஸ்டீபன், பாரதி, கார்த்திக், கணேசன் ஆகிய நால்வரையும் கைது செய்திருக்கிறது காவல்துறை.

உறுதியான போராட்டம்

உறுதியான போராட்டம்

எம் புள்ளய சீரழிச்சிட்டவனுங்களை சொல்லி புகார் கொடுக்கப் போனப்ப.. சாமி எம்.எல்.ஏ. பேரைச் சொல்லி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தாங்க.. எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்கிறதுல நாங்க உறுதியா இருந்தோம் என்று கூறியுள்ளார் நிவேதாவின் அம்மா.

எம்.எல்.ஏ மழுப்பல்

எம்.எல்.ஏ மழுப்பல்

இது குறித்து எம்எல்ஏ சாமி நக்கீரனுக்கு அளித்துள்ள பேட்டியில், பிரியாணி விருந்து கொடுத்துட்டு.. அன்னைக்கே நான் சென்னைக்கு போயிட்டேன்.. கைதானவங்க ஆளுங்கட்சிக்காரர்களாக இருக்கலாம். ஆனால் இந்தக் கேஸுல நான் தலையிடவே இல்லை என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ சாமி.

உண்மை எதுவோ அந்த சாமிக்கே வெளிச்சம்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+