For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டார் ஹோட்டலில் கடும் கண்காணிப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்... 3 நாளைக்கு டூர்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த உடன் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பத்திரமாக சொகுசு பேருந்து மூலம் ரெயின்ட்ரீ நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து 3 நாட்களுக்கு பாதுகாப்பாக பேரு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அமைதியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியான போராட்டம் நடத்திய பின்னர் ஆவேச பன்னீர் செல்வமாக மாறிய சசிகலா மீது சராமரி குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

இதன் பின்னர் தமிழக அரசியல் களமே பரபரப்படைந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் பின்னால் யாரும் இல்லை எல்லோரும் எங்க பின்னாடிதான் இருக்கிறார்கள் 134 பேர் இருக்கிறார் என்று அவசரமாக பேட்டி கொடுத்தார் தம்பித்துரை.

ADMK MLAs shifted to star hotel

இந்த நிலையில் இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் நடைபெற்றது. நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் சொகுசு பேருந்து மூலம் பாதுகாப்பாக ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கேயே காலை உணவு கொடுக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த உடன் மதிய சாப்பாடு அங்கேயே கொடுக்கப்பட்டது. உணவு சாப்பிட்டு உடன் மீண்டும் பேருந்து மூலம் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராயப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ADMK MLAs shifted to star hotel

இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்துகளில் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட உள்ளார்களாம். பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்து ஆளுநர் முடிவு எடுக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் சுற்றுப்பயணத்திலேயே இருக்க சசிகலா உத்தரவிட்டுள்ளாராம்.

ADMK MLAs shifted to star hotel

3 நாளுக்கு தேவையான உடைகளையும் எம்.எல்.ஏ.க்கள் எடுத்துச் சென்றுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் முகாமுக்கு மாறுவதை தடுக்கவே இந்த சுற்றுலாப் பயணம் என தகவல் வெளியாகி உள்ளது.

எம்எல்ஏக்களை பாதுகாப்பாக பேருந்துகளில் அழைத்து சென்று தங்கவைப்பது முதல் அவர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கவனித்துக்கொள்கின்றனராம். செல்போன்களும் கடுமையான கண்காணிப்பில் உள்ளார்களாம் எம்.எல்.ஏக்கள்.

ஸ்கெட் போட்ட நடராஜன்

ஒரு எம்.எல்.ஏக்கள் கூட ஓபிஎஸ் பக்கம் போயிடக்கூடாது. அத்தனை பேரையும் நம்ம கண்காணிப்புல வைக்கணும் என்று இந்த திட்டத்தை போட்டுக்கொடுத்தவரே நடராஜன்தானாம். 1988 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகும் இதே போல ஒரு நிலை ஏற்பட்டது. அப்போதும் அதிமுக எம்எல்ஏக்கள் இதே போல ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்றார்கள் என்பதே இன்னும் ரகசியமாக உள்ளது. ஓபிஎஸ் சொன்னது போல ஜெயலலிதாவின் ஆன்மா எம்எல்ஏக்களை உசுப்பிவிடுமா?

English summary
AIADMK in Tamil Nadu is resorting to hotel politics. MLAs were shifted to nearby hotels. The move is a clear attempt by the party to ensure that no legislator switches loyalty and joins O Panneerselvam's camp.Stuffed into three buses, legislators were taken to different hotels in the city soon after the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X