அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு- ஆளுநர் பற்றி புகார்
அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குடியரசுத்தலைவரை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 131 அதிமுக எம்.எல்.ஏக்களும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 3 பேரும் பங்கேற்றனர்.
சசிகலா மீது ஓபிஎஸ் பரபரப்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டம் என்பதால் அதிக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய சசிகலா, நம்மை பிரித்தாளும் சக்தி யாருக்கும் இல்லை என்று கூறினார்.

ஜெயலலிதாவின் சக்தி நம்முடன் இருப்பதால் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று கூறிய அவர் அதிமுக ஒரே குடும்பமாக உள்ளது என்றும் கூறினார். அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. அதிமுக எம்எல்ஏக்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கவில்லை என்று கூறிய சசிகலா, ஜெயலலிதா காட்டிய வழியில் அனைவரும் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
கூட்டத்தில் 131 எம்எல்ஏக்கள் சசிகலாவிற்கு ஆதரவாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும், எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை என்று இதன் மூலம் நிருபிக்கப்பட்டு விட்டதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்எல்ஏக்கள் அனைவரும் குடியரசுத்தலைவரை நேரில் சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் தாமதம் செய்வதாக குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications