அதிமுக என்றால் இனி நாங்கள் தான்...மைத்ரேயன் வெற்றி கொக்கரிப்பு!
அதிமுக என்றால் இனி நாங்கள் தான், இனி அணி எல்லாம் கிடையாது என்று அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக என்றால் இனி நாங்கள் தான், இனி அணி எல்லாம் கிடையாது என்று அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தங்கள் அணிக்கு வேறு பெயரைத் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பது குறித்து கூறுகையில்: ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக மிகப்பெரிய பிளவைக் கண்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டது. இதற்கிடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்த போது இரு அணிகளும் உரிமை கோரியதால் தற்காலிகமாக இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டது.

அதற்குப் பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு முதல்வர் பழனிசாமி தலைமையில் பெரும்பாலான எம்பிகளும், எம்எல்ஏக்களும் விலகி வந்து தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றார்கள். அதன் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தனை.
மேலும் தேர்தல் ஆணைய வழக்கில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமியும் ஒரு மனுதாரராக இணைந்தார். இன்று தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் தீர்ப்பு, ஓ.பிஸ், ஈபிஎஸ் போன்ற மிகப்பெரும் தலைவர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி.
அவர்களுக்கு மட்டுமின்றி, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி இது. இந்திய அரசியல் வரலாற்றில் பல கட்சிகள் உடைந்திருக்கின்றன, ஆனால் எந்த கட்சியும் மீண்டும் இணைந்து சின்னத்தை பெற்றதில்லை. அதிமுக தான் இரண்டு முறையும் பிளவு கண்டு பின்னர் சேர்ந்து சின்னத்தை வென்றுள்ளது.
ஜனநாயகத்தில் பாதிக்கப்பட்ட யாருமே நீதிமன்றத்தை நாட உரிமை உள்ளது. ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் நிதிஷ்குமாருக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து சரத்யாதவ் எம்பி தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே எந்த நீதிமன்றத்தை அணுகினாலும் தினகரனுக்கு அதே தீர்ப்பு தான் கிடைக்கும் ஏனெனில் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் இரண்டு கட்சியின் நிலைமையும் ஒன்று தான்.
அதிமுக என்றால் இனி அணி கிடையாது, அதிமுக என்றால் இனி நாங்கள் மட்டும் தான். தினகரன் வேறு பெயரை தங்களது அணிக்கு தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று மைத்ரேயன் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications