உணவு பாக்கெட்டுகளில் பங்கு கேட்டு அதிமுகவினர் அடாவடி: தீயாக பரவும் வீடியோ- இவர்களை என்ன செய்யலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றில் மக்களுக்கு அளிக்க தன்னார்வலர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களில் 2 ஆயிரம் பொட்டலங்களை கேட்டு அதிமுக கவுன்சிலரின் கணவர் செய்யும் அடாவடி காட்சி அடங்கிய வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு பிரபலங்களும், தொண்டு நிறுவனங்களும், கல்லூரி மாணவர்களும், தன்னார்வலர்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். அதிமுக அரசு எதையுமே செய்யவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

Enna seiyalam ivargalai

Posted by Bass Karan on Sunday, December 6, 2015

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவின் விபரம்,

தன்னார்வலர் ஒருவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அளிக்க 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்களுடன் வந்துள்ளார். அவரை அதிமுகவினர் அதில் ஒருவர் கவுன்சிலரின் கணவராம் அவர் பெயர் பார்த்திபன் ஆகியோர் வழிமறித்து தங்களுக்கு 2 ஆயிரம் பொட்டலங்களை அளிக்குமாறு கேட்கிறார்கள்.

அதற்கு அந்த தன்னார்வலர் நான் மக்களுக்காக கொண்டு வந்துள்ளேன் என்கிறார். இருக்கட்டும் முதலில் எங்களுக்கு கொடுங்கள் என்று அடாவடி செய்கிறார்கள்.

அடாவடி செய்யும் அதிமுகவினர் மீது புகார் அளிக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பிறகும் இந்த கொடுமை நடக்கிறதே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+