For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை தீபத்திருவிழாவில் கோவில்களில் அதிமுகவினரின் “அம்மா” தீபங்களின் கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதை ஒட்டி அதிமுக செயலாளர் ஜெயலலிதாவிற்காக கோவில்களில் அதிமுகவினர் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

தீபத்திருவிழாவையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரில் தமிழகத்தில் பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். இதில் உச்சகட்டமாக நீலாங்கரையில் அதிமுகவினர் திருநீலகண்டர் சிவன் கோவிலில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும், நீடுழி வாழவேண்டும் என்று கோரி 1008 விளக்குகள் ஏற்றினர்.

1008 விளக்குகளில் ஜெயலலிதாவைக் குறிக்கும் வகையில் "அம்மா " என்ற எழுத்துக்கள் வரும்படி செய்து தங்கள் அம்மா விசுவாசத்தை காட்டி அசத்தினர் அதிமுகவினர்.

ADMK volunteers celebrate Deepam in Temples…

நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா மற்றும் அ.தி.மு.கவினர் பலர் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சி தணிக்கை நிலைக்குழு தலைவர் எம்.சி.முனுசாமி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

English summary
ADMK volunteers celebrated Karthigai deepam festival in the name of Jayalalitha in Tamil Nadu temples.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X