2024ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் எங்களுக்கு ஓகே.. சொல்கிறார் ஜெயக்குமார்!

2024ல் ஒரே நேரத்தில் சட்டமன்றம், மக்களவைக்கு மத்திய அரசு தேர்தல் நடத்தினால் அதிமுக ஏற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ல் ஒரே நேரத்தில் சட்டமன்றம், மக்களவைக்கு மத்திய அரசு தேர்தல் நடத்தினால் அதிமுக ஏற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இரட்டை மலை சீனிவாசனின் 159வது பிறந்த நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சென்னை கிண்டியில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜெயலலிதா கொள்கை

ஜெயலலிதா கொள்கை

அப்போது அவர் பேசியதாவது, ஒரே நேரத்தில் தேர்தல் விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையையே கடைபிடிக்கிறோம். சட்டமன்ற தேர்தலுடன், நாடாளுமன்ற தேர்தலை நடத்தக்கூடாது.

வரவேற்கத்தக்கது

வரவேற்கத்தக்கது

தேர்தல் ஆணையத்தின் முடிவை அறிந்த பின்பே கருத்து தெரிவிக்க முடியும். ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது வரவேற்கத்தக்கது.

அதிமுக ஏற்கும்

அதிமுக ஏற்கும்

2024அம் ஆண்டு சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். அப்படி நடத்தினால் அதனை அதிமுக வரவேற்கும்.

சிகரெட்டுக்கு தடை

சிகரெட்டுக்கு தடை

திரைப்படத்துறையினர் லாப நோக்கமின்றி சமுதாயத்துக்காக செயல்பட வேண்டும். மத்திய அரசு சட்டம் இயற்றினால்தான் சிகரெட்டுக்கு தடை விதிக்க முடியும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சட்ட ஆணையம் ஆலோசனை

சட்ட ஆணையம் ஆலோசனை

இந்நிலையில் ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு தேர்தல் நடத்துவது குறித்து டெல்லியில் சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்கிறது. இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+