'அதிமுகவினரின் சின்னம்மா' சசிகலா 10 நாளில் தமிழக முதல்வராகிறார்.. சொல்வது சு.சுவாமி
சசிகலா முதல்வராவது உறுதி என கூறுகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அதிமுகவில் சசிகலாவுக்கு தடை ஏதும் இல்லை எனவும் சுப்பிரமணியன் சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராக அதிமுகவினரின் சின்னம்மா சசிகலா 10 நாட்களில் பதவியேற்பார் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
நியூஸ் எக்ஸ் டிவி சேனல் விவாதத்தின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. சசிகலாவின் கணவர் நடராஜன் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இன்னும் 10 நாட்களில் தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார். அவர் முதல்வராக அதிமுகவில் எந்த தடையுமே இல்லை. சசிகலா முதல்வராவதில் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது.
ராஜீவ் காந்தி இருந்தவரை சோனியா காந்தி எதுவுமே பேசியதே இல்லை. அவர் வெளிநாட்டுக்காரராக இருந்தபோதும் காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தியவர்.
சசிகலாவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்தவர். அனைத்து நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டவர் சசிகலா. சசிகலா தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தேவர் சமூக எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.












Click it and Unblock the Notifications