ஜெயலலிதா நலம் பெற வேண்டி... அப்பல்லோவில் கோமாதா பூஜை!
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் கோமாதா பூஜையில் ஈடுபட்டனர்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி இன்று அப்பல்லோ வாயிலில் அதிமுகவினர் கோமாதா பூஜை நடத்தினர்.
உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு முதல் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.37 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் பல்வேறு வகையான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு தினமும் வந்து வெளியில் பூசணிக்காய் உடைப்பது, தேங்காய் உடைப்பது, குங்குமபூஜை, குத்து விளக்கு பூஜை, மண்சோறு சாப்பிடுவது, அக்னி சட்டி எடுப்பது என்று விதவிதமான பூஜைகள் செய்கிறார்கள்.

அமைச்சர்களும் பல்வேறு கோயில்களில் பிரார்த்தனைகள், யாகங்கள், பால்குடம் என பிஸியாக இருக்கின்றனர். இஸ்லாமியர்களின் நோன்பும், கிறிஸ்தவர்களின் பிரார்த்தனையும் தினசரி அப்பல்லோ மருத்துவமனை முன்பு நடைபெறுகிறது. அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தினம்தோறும் விதவிதமான பூஜைகள் நடத்தி வருகின்றனர். அதேபோல் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் குத்துவிளக்கு பூஜையில் தொடங்கி சாமியார்களின் சூலாயுத பூஜை வரை என தொடர் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பல்லோ முன்பு இன்று அதிமுகவினர் கோமாதா பூஜை நடத்தினர். தொண்டர்களும் மாலை அணிந்து வந்திருந்தனர். நிகழ்ச்சியில் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications