திருமங்கலத்தில் இடைத்தேர்தல்? சசி வெற்றிக்காக திமுக பார்முலாவை கையிலெடுக்கும் அதிமுக
அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவிற்காக ஆள் ஆளுக்கு பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதால் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திருமங்கலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 2009
மதுரை: திருமங்கலம் சட்டசபை தொகுதி இந்திய அளவில் பிரபலமானதற்கு காரணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து சத்தியம் வாங்கி ஓட்டுக்களை பெற்றதுதான்.
2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். உடல் நலக்குறைவினால் அவர் மரணமடையவே, திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது.
2009ம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த திமுக, அப்போது அழகிரியின் மூலம் அரங்கேற்றிய அராஜகங்கள் வரலாற்றில் இடம் பெறும் அளவிற்கு சென்றது. இன்றைக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் திருமங்கலம் பார்முலா என்று பேசும் அளவிற்கு இந்திய தேர்தல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

ப்ளெக்ஸ் பேனர்கள்
திருமங்கலத்தில் சசிகலா போட்டியிட விரும்பினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். திருமங்கலத்தில் சசிகலா போட்டியிடப் போகிறார் என்ற தகவல் வெளியான உடனேயே ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் முளைத்து விட்டன.

பெண் வாக்காளர்கள்
திருமங்கலத்தின் சிட்டிங் எம்.எல்.ஏவும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஒருவேளை ராஜினாமா செய்து தேர்தல் நடைபெறும் பட்சத்தில் சசிகலாவை எப்பாடு பட்டாவது ஜெயிக்க வைப்போம் என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் திருமங்கலம் தொகுதியில் உள்ள பெண் வாக்காளர்கள் சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

எதிர்ப்பை சமாளிக்க வியூகம்
ஆர். கே. நகரில் சசிகலா போட்டியிட்டால் தோற்கடிப்போம் என்று கூறுவதால் அவரது பார்வை தென் மாவட்டங்களின் பக்கம் திரும்பியுள்ளது. திருமங்கலத்தில் எதிர்ப்பை சமாளிக்க ஆளுங்கட்சியினர் 2009 பார்முலாவை கையில் எடுப்பார்கள் என்றே கூறப்படுகிறது.

சசிகலாவின் மனநிலை
என்னதான் ஓட்டு போடமாட்டேன் என்று கூறினாலும் இரட்டை இலையை பார்த்தால் அதிமுக பெண் தொண்டர்களின் மனநிலை மாறிவிடும் என்று நிர்வாகிகள் நம்புகின்றனர். திருமங்கலத்தில் சசிகலா போட்டியிடுவாரா? அல்லது தேனி, ஆண்டிபட்டி என்று மாறுவாரா? தஞ்சாவூர் மாவட்டம் பக்கம் கவனத்தை செலுத்துவாரா இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்து விடும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications