பதவிப் பித்தர்களுக்கு வேப்பிலை அடித்துள்ளாராம் ரஜினி.. சொல்கிறது நமது அம்மா!
தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார் என நமது அம்மா நாளிதழ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார் என நமது அம்மா நாளிதழ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், சமூக விரோதிகளே தூத்துக்குடி கலவரத்துக்கு முக்கிய காரணம் என்றார்.
எல்லாவற்றுக்கும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும் ஆவேசமாக பதிலளித்தார். ரஜினிகாந்தின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும்
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்று கட்டுரை வெளியாகியுள்ளது. நமது அம்மா நாளிதழில் காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்வரின் கருத்து
"தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது.

எள்ளளவும் ஐயமில்லை
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகளும், சமூகவிரோதிகளும் திமுகவினர்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பதவிப்பித்து பிடித்து
ராஜினாமா செய்வது பிரச்சினைக்கு தீர்வாகாது என நெத்தியடி பதில் கூறி பதவிப்பித்து பிடித்து அலையும் மாதிரி தலைவர்களுக்கு ரஜினி சரியாக வேப்பிலை அடித்துள்ளார். எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய் என கூறி வரும் கம்யூனிஸ்டுகளுக்கும் ரஜினியின் பதில் புத்தியில் உரைக்க புகட்டப்பட்ட மருந்து.

சமூக விரோதிகள் புகுந்ததால்
சமூக விரோதிகள் யார் என்பதை கருத்து ஜாடை காட்டி அம்பலப்படுத்தி மனசாட்சி குன்றாது மக்களிடம் ரஜினிகாந்த் உண்மைய பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்" இவ்வாறு நமது அம்மா நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications