அரிவாளில் இருந்து சுவாதியின் ரத்தமோ ராம்குமாரின் கைரேகையோ கண்டறியப்பட்டுள்ளதா?
33) ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோர் இது ஒரு முஸ்லிமினால் செய்யப்பட்ட கொலை தான் என்று பேட்டி கொடுத்தது ஏன்? அவர்களுக்கும் இந்த கொலை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்? எது அவர்களை இப்படிக் கூற வைத்தது?
34) இவ்வளவு சந்தேகங்கள் பிலாலின் மேல் எழுந்தும் அவரை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? அவரது தொலைபேசி பதிவுகள், வீடு போன்றவை சோதனைக்கு உட்படுத்தப்படாதது ஏன்?
35) முதலில் கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் என்று சந்தேகிக்கப்பட்ட அரிவாள் கர்நாடகா மாநிலத்தில் பயன்படுத்தப்படுவது என்று அறிவித்ததை, ராம்குமாரின் கைதிற்கு பின் அது திருநெல்வேலியில் பயன்படுத்தப்படும் அரிவாள் என்று அறிவித்தது எப்படி?

36) சுவாதியின் பிரேத பரிசோதனை அறிக்கை எங்கே? அதில் என்ன கூறியிருக்கிறது என்ற தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது எதனால்?
37) பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்வாதி கொலையுண்டது போலீசார் வசம் உள்ள ஆயுதத்தால் தான் என்று ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளதா?
38) ராம்குமார் தான் அந்த அரிவாளை பக்கத்து தோட்டதில் இருந்து திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த பக்கத்து வீட்டு ஆட்கள் யார்? அந்த அரிவாள் தங்களுடையது என்று ராம்குமாரின் அண்டை வீட்டார் யாரேனும் அடையாளம் கண்டுள்ளனரா?
39) அந்த அரிவாளில் இருந்து சுவாதியின் ரத்தமோ ராம்குமாரின் கைரேகையோ கண்டறியப்பட்டுள்ளதா?
40) கொலை செய்து விட்டு ரத்தம் படிந்த சட்டையுடன் ராம்குமார் மேன்ஷனிற்குள் நுழைந்திருந்தால் வழியில் யார் கண்ணிலாவது சிக்கியிருப்பார். ஒருவேளை முன்னேற்பாடோடு வேறு சட்டை ஒன்றை அவர் எடுத்து சென்றிருந்து அதை மறைவிடம் வந்து மாற்றி இருந்திருக்கலாம். அப்படி மிக ஜாக்கிரதையாக திட்டம் தீட்டியவருக்கு ஏன் அந்த சட்டையை அழிக்க தோன்றவில்லை? சுவாதியின் ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையை ராம்குமாரின் வீட்டில் கைப்பற்றியதாக போலீசார் அறிவித்துள்ளனர். ஒரு வார காலமாகவா ராம்குமார் அந்த சட்டையை பத்திரப்படுத்தி வைத்திருந்திருப்பார்? அதை அழித்திருக்க அவருக்கு போதிய அவகாசம் இருந்ததல்லவா? அப்படி இருக்கையில் அதை ஏன் ராம்குமார் அழிக்காமல் வைத்திருந்தார்? தான் ஆடு மேய்க்க போனபோது ஒரு குழியைத்தோண்டி புதைத்திருக்கவோ அல்லது எரித்திருக்கவோ வாய்ப்பிருக்கிறதே? அதை ஏன் அவர் செய்யவில்லை?
41) சுவாதியின் செல்போனை ராம்குமாரின் வீட்டில் கண்டெடுத்ததாக கூறுகின்றனர். ராம்குமாரின் செல்போனை புகைப்படமெடுத்து பத்திரிக்கைகளில் வெளியிட்ட போலீசார் ஏன் ஸ்வாதியின் செல்போனை அதே போல வெளியிடவில்லை? உண்மையிலேயே ஸ்வாதியின் செல்போன் ராம்குமார் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதா? அது இப்போது எங்குள்ளது? அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் யாவை? வாட்சப் மூலமாக நான் சுவாதியிடம் பேசுவேன் என்று ராம்குமார் கூறியது உண்மை என்றால் என்கிரிப்ஷன் முறையில் பழைய வாட்சப் குறுஞ்செய்திகளை சுவாதியின் செல்போனில் இருந்து கண்டெடுக்க முடியும். அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? ஆமாம் என்றால் அதில் இருந்து தெரிந்து கொண்ட உண்மைகள் யாவை?
42) ஏற்கனவே போலீசாரால் ஸ்வாதியின் டூப்ளிகேட் சிம்கார்டு எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பெங்களூர் எண்ணிற்கு மட்டும் ஸ்வாதி அதிக அளவில் பேசியதாகவும் குறுஞ்செய்திகள் பரிமாறிக்கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. அது ராம்குமாரின் எண் இல்லை. அந்த எண் யாருடையது? அந்த குறுஞ்செய்திகள் என்ன என்று கண்டுபிடிக்கப்பட்டதா? அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா? அது பிலால் மாலிக்கின் எண்ணா? சுற்றி சுற்றி பெங்களூருக்கும், பிலால் மாலிக்கிற்கும் சுவாதியின் அப்பாவிற்கும், இந்த கொலை சம்பவத்திற்கும் ஏதோ ஒரு முக்கிய தொடர்பு இருப்பது போலவே தோன்றினாலும் இந்த கோணத்தில் காவல்துறை தீவிரமாக விசாரிக்காதது ஏன்? அந்த கோணத்திலும் விசாரித்தோம் என்றால் ஏன் அந்த பெங்களூர் மர்ம நபர் (பிலால் மாலிக்காகவும் இருக்கலாம்) காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படவில்லை? அதே போல ஸ்வாதியின் கம்ப்யூட்டரை கைப்பற்றி விசாரித்ததாக கூறினார்களே, அதில் கிடத்த தகவல்கள் என்ன?
43) உண்மைகள் இவ்வாறு இருக்க ஸ்வாதியை பின் தொடரும் நோக்கத்தோடு ராம்குமார் சென்னைக்கு வந்திருந்தால் தனது சரியான முகவரியை மேன்ஷனில் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? காதலுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கொன்று விடலாம் என்ற நோக்கத்தோடு அரிவாளை திருடிக்கொண்டு வந்தவன் முன்னெச்சரிக்கையாக போலி முகவரி கொடுத்திருந்திருக்கலாமே? அல்லது ஏ.எஸ்.மேன்ஷனை காலி செய்து போலி முகவரியுடன் வேறு அறை எடுத்து தங்கி இருக்கலாமே?
44) ஒருவேளை ராம்குமார் கொலை செய்திருந்தால் மேன்ஷனில் தன்னை பற்றிய முழு விபரம் உள்ளதால் போலீஸ் எப்படியும் தன்னை நெருங்கி விடும் என்ற எண்ணம் வந்திருக்காதா? நெல்லை வந்த ராம்குமார் வட மாநிலத்திற்கு ரயில் ஏறி இருந்திருக்கலாமே? அதற்கு போதிய அவகாசம் இருந்தது தானே?
45) ஏ.எஸ்.மேன்ஷனின் 404 என்ற அறையில் ராம்குமாரின் பொருட்கள் குறைந்த அளவே இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் ராம்குமார் கொலை செய்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் நெல்லைக்கு கிளம்பி இருந்திருக்கும் பட்சத்தில் அவரது resume மற்றும் வீட்டு முகவரி சம்மந்தப்பட்ட விவரங்களை உடன் எடுத்து சென்றிருக்கலாமே? தடயங்களை ஏன் விட்டுச்செல்ல வேண்டும்?
46) இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, ராம்குமாரின் வீட்டிற்குள் நுழையும் முன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் என்ன? நன்றாக தூங்குபவர்களும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எழுந்து விடுவார்கள், வெளியே உண்டாகும் ஒவ்வொரு அசைவும் தெளிவாக வீட்டினுள் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடுமே என்று கூடவா போலீசாருக்கு தெரியவில்லை? மின்சார வெளிச்சத்தில் சுற்றி வளைத்திருந்தால் "ஆபரேஷன் ராம்குமார்" இன்னும் எளிதாக முடிந்திருக்குமே?
47) ராம்குமார் வீட்டினுள் நுழையும் போது ராம்குமாரை முத்துகுமார் என்று போலீசார் குறிப்பிட என்ன காரணம்? தீவிரமாக நோட்டம் இட்டு பிடிக்கப்பட்ட நபரின் பெயரை கூடவா போலீசார் சரியாக தெரிந்து வைத்திருக்கவில்லை?
48) ராம்குமார் போலீசாருக்கு பயந்து தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது என்ற சம்பவம், ராம்குமார் தான் கொலையாளி என்று நம் எல்லாரையும் நம்ப வைத்தது. ஆனால் உண்மையிலேயே ராம்குமார்தான் தன் கழுத்தை அறுத்துக்கொண்டாரா? பதட்டத்திலும் அளவெடுத்த மாதிரியா ஒருவன் தன் கழுத்தை அறுத்துக்கொள்வான்? தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒருவன் பிளேடை கையில் வைத்துக்கொண்டே தூங்க முடியுமா? மின்சாரம் இல்லாதபோதும் சரியாக பிளேடை தேடி எடுக்கும் அளவிற்கு ராம்குமாருக்கு அவகாசம் இருந்திருக்குமா? ராம்குமாரே தற்கொலைக்கு முயன்றிருந்தாலும் உட்காரவைத்து புகைப்படம் எடுக்கும் அவகாசம் போலீசாருக்கு எப்படி கிடைத்தது?
49) ராம்குமாரின் வீட்டு பெண்களை கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுத்து அவசர அவசரமாக செய்திகளில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அது ராம்குமாரை எந்த வகையேனும் மிரட்டும் முயற்சியோ? ராம்குமாரை புழல் சிறையில் அடைக்கும் வரை ராம்குமாரின் பெற்றோர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை?
50) உண்மையில் சுவாதி கொலை வழக்கில் என்னதான் நடக்கிறது? ஏன் இத்தனை விடை தெரியா கேள்விகள்? இவைகளுக்கு விடை அறிய முயலாத போலீசாரின் அலட்சியம் ஏன்?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் நேர்மையான பதில்கள் காவல்துறையிடம் இருந்தால் நிச்சயமாக ராம்குமார்தான் குற்றவாளி என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இருப்பின் ராம்குமார் இந்த கொடூர கொலைக்கான சரியான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். ராம்குமார் தனியாக செய்திருந்தாலும் சரி, கூட்டுச்சதி செய்திருந்தாலும் சரி, தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஒருவேளை இந்த கேள்விகளுக்கு காவல்துறையிடம் பதில்கள் இல்லையெனில், வேகமாக இவ்வழக்கை முடிக்கும் நோக்கத்தில் நீதியை சாகடிக்கும் மெத்தனத்தை, யாரையோ எதற்காகவோ காப்பாற்ற முயலும் முனைப்பை, பொது மக்களின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். ராம்குமார் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டிருப்பின் நாளை நமக்கும் இந்த நிலைமை வரலாம்.
இந்த பதிவு கடந்த 24 மணிநேரமாக வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications