சுவாதியின் முகநூல் பக்கத்தை முடக்கியதன் காரணம் என்ன?
17) ராம்குமாரின் முகநூலில் சுமார் 300 நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ராம்குமாரின் புகைப்படங்களை "like" இட்டவர்கள் "comment" இட்டவர்கள் என்று ஒருவர் கூட ராம்குமாரின் மேல் சந்தேகப்படாததும் வினோதமே!
18) ஸ்வாதி பேஸ்புக், ட்விட்டர், வாட்சப், இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துபவராக இருந்துள்ளார். முகநூலில் 23-11-2013 அன்று "Feeling loved :) ❤ " என்று பதிவு போட்டுள்ளார், குறிப்பாக சமீபத்தில் இன்ஸ்டாக்ராமில் பெங்களூர் தர்ஷினி உணவகத்திலிருந்து "lost my fav ring misng t a lot " என்றும் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவுகள் சாதாரணமானவைகளாக கூட இருக்கலாம். ஆனால் இந்த வழக்கின் தன்மை கருதி எந்த சூல்நிலைகளில் ஸ்வாதி அந்த பதிவுகளை பதிவிட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனரா?

19) முகநூலில் வேறு ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்கிறதா என்று தீர விசாரிக்கும் முன் அவசர கதியில் ஸ்வாதியின் முகநூல் பக்கத்தை முடக்கியதன் காரணம் என்ன?
20) ஸ்வாதியின் முகநூல் பக்கம் அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க முடக்கப்பட்டாதாக கூறப்படுவது உண்மை என்றால் கொலையாளியை பிடிக்க முனையாமல் கொலையாளியை நெருங்க உதவும் கருவிகளை முடக்க நினைத்ததன் காரணம் என்ன?
21) ஸ்வாதி அவரது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகள் என்று கூறப்படுகிறது. இது உண்மை என்றால் இந்த கொலை அவர்களது குடும்ப பிரச்சனையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விடாமல் ஒருதலை காதல் என்று மட்டும் தீவிரமாக விசாரித்ததின் பின்னணி என்ன?
22) ஸ்வாதியின் அப்பா மகள் இறந்து கிடந்ததை பார்த்து அழுததை விமர்சிப்பது முறையாகாது. ஆனால் போலீசார் இதை ஏன் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஸ்வாதியின் தந்தையை தீவிரமாக விசாரிக்கவில்லை?
23) கொலையாளியை பிடிப்பதற்கு முன்னரே ஸ்வாதியின் தந்தை, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தன் குடும்பத்தாரை தொந்தரவு பண்ணக்கூடாது என்று முதலமைச்சருக்கு அவசரமாக மனு செய்ததன் பின்னணி என்ன?
24) சுவாதியின் பெண் தோழி ஒருவர் முகநூலில் பழக்கமான நண்பர் ஒருவரிடம் சுவாதி சில லட்ச ரூபாய் பெற்றதாகவும் அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இது உண்மையா? அந்த நண்பர் யார்? அவருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு? இதை ஏன் போலீசார் தீவிரமாக விசாரிக்கவில்லை?
25) ஸ்வாதி ஒருவரை காதலித்து பின்னர் பிரிந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் காதலித்த அந்த நபர் யார்? சுவாதிக்கும் அவர் முன்னால் காதலருக்கும் பிரச்சனைகள் இருந்திருக்கலாம். அப்படி இருக்கும் பச்சத்தில் அந்த நபரை ஏன் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை?
26) சுவாதி தன்னை யாரோ ஒருவன் பின் தொடர்வதாக தோழி, தோழன், அக்கா மற்றும் அப்பா ஆகியோரிடம் கூறியதாக தெரிவித்தனர். ராம்குமாரின் கைதுக்கு பின்னர் ராம்குமார்தான் ஸ்வாதியை சில காலமாக பின் தொடர்ந்த நபர் என்றும் அதனை ராம்குமாரே ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது உண்மையெனில் ஏற்கனவே அறிமுகமான ராம்குமாரைப் பற்றி சுவாதி அவர்களிடம் கூறாமல் இருந்திருப்பாரா? அப்படியே ஏதாவது காரணம் கருதி ராம்குமாரின் அடையாளத்தை அவர் மறைத்திருந்தால் அந்த காரணம் என்ன? இந்த பிரச்சனையை ஏன் சுவாதியின் நண்பர்களோ அல்லது உறவினர்களோ காவல்துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை?
27) ராம்குமார்தான் சுவாதியை பின் தொடர்ந்து கண்காணித்தவர் என்றால் அவர் தான் தங்கியிருந்த மேன்ஷனில் இருந்து தினமும் காலை மணி 6லிருந்து 6.30க்குள் தன் அறையை விட்டு கிளம்பியிருக்க வேண்டும். ராம்குமார் மேன்ஷனில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைவதற்கு இருக்கும் வழிகளில் உள்ள சி.சி.டி.வி. காமெராக்களில் கொலைக்கு முந்தைய நாட்களில் ராம்குமாரின் உருவம் பதிவாகியுள்ளதா என்று விசாரிக்கவில்லையே ஏன்? அனைத்து சி.சி.டி.வி காமெராக்களையும் ஆராயவில்லை என்றாலும் கொலையாளி என்று சந்தேகிக்கப்பட்ட உருவம் பதிவான அந்த குறிப்பிட்ட காமெராவிலாவது முந்தைய நாட்களில் அதே உருவமோ அல்லது ராம்குமாரின் உருவமோ பதிவாகி இருந்ததா என்று ஏன் ஆராயவில்லை?
28) சூர்யபிரகாஷ் என்ற நண்பர் மூலமாக ஸ்வாதியின் நட்பு கிடைத்ததாக ராம்குமார் கூறியிருக்கிறார். யார் அந்த சூர்யபிரகாஷ்? அவரை ஏன் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை?
29) சுவாதி இறந்த இரண்டு நாட்களுக்குள் பிலால் மாலிக்தான் குற்றவாளி என்று இணையத்தில் செய்தி பரவ என்ன காரணம்? அச்செய்தியை பரப்பியது யார்? அவர்களைப் போலீசார் கண்டுபிடிக்காதது ஏன்?
30) பெங்களூரைச் சேர்ந்த பிலால், சுவாதி கொலையான அரை மணி நேரத்திற்குள் எப்படி சம்பவ இடத்திற்கு வந்தார்?
31) பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடம், பொது நண்பர்கள் இப்படி எந்த தொடர்பும் இல்லாமல் பெங்களூரைச் சேர்ந்த பிலால், சுவாதிக்கு அறிமுகமானது எப்படி? சென்னை இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு முன் சுவாதி பெங்களூரில் ட்ரைனிங் எடுத்தவர் என்பதும், சென்னை வந்த பிறகும் அடிக்கடி அவர் பெங்களூர் செல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
32) பிலாலிடம் சுவாதிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் அவர் திணறியது ஏன்? வெறும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அதை தைரியமாக அவர் கூறியிருக்கலாமே?













Click it and Unblock the Notifications