முற்றுகை போராட்டம்: 5 வக்கீல்கள் ஜாமின் மனு தள்ளுபடி- கோர்ட் புறக்கணிப்பு நீடிக்கும் என அறிவிப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் 5 பேரின் ஜாமின் மனுவை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து 5 வழக்கறிஞர்களும் விடுதலை செய்யப்படும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு34(1)ல் பல்வேறு திருத்தங்களை கடந்த மே மாதம் அறிவித்தது. இதன்படி தவறு செய்யும் வழக்கறிஞர்களை மாவட்ட/ உயர்நீதிமன்ற நீதிபதிகளே தண்டிக்கலாம். வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை செய்யலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
இதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைகோர்ட் முற்றுகைப் போராட்டம்
இந்நிலையில் வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, 126 தமிழக வழக்கறிஞர்களை சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்ததால் வழக்கறிஞர்களின் போராட்டம் சூடு பிடித்தது.

596 பேர் கைதாகி விடுதலை
இரவில் விடுதலை சென்னை உயர்நீதிமன்றத்தை நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர். இதில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர்கள் 15 பேர் உட்பட 596 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு
போராட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாக ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருணாகரன், யாசர் அராபத், அசோக்குமார், கிஷோர் மற்றும் ஓம்பிரகாஷ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமின் மனு தள்ளுபடி
இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி வடிவேல் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 வழக்கறிஞர்களுக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் ஜாமின் தர மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

போராட்டம் தொடரும்
இந்த நிலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களும் விடுதலை செய்யப்படும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 5 பேருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதற்காக குழு அமைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications