திருவள்ளூரில் குடோன் சுவர் இடிந்து விழுந்து 11 கட்டிட தொழிலாளர்கள் பலி - 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி அருகே உள்ள உப்பரப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குடோனின் சுற்றுச்சுவருக்கு அருகேயே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இப்பகுதியில் கனமழை பெய்தது. இதில் புதிதாக கட்டப்பட்ட அக்குடோனின் சுற்றுச்சுவர் இன்று காலை இடிந்து அருகிலிருந்த குடிசையின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உட்பட 11 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் இருந்து பலியான 11 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். மேலும், குழந்தைகள் உட்பட பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
நேற்று பெய்த மழை காரணமாகவே சுற்றுச்சுவர் இடிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சுற்றுச்சுவர் தரம் குறைந்து, வலுவிழந்து இருந்ததே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சோழவரம் போலீசார், கட்டட உரிமையாளர்களான பாலா மற்றும் ராமநாதன் ஆகியோர்களை கைது செய்துள்ளனர்.
கடந்தவாரம் சனிக்கிழமையன்று சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கனமழையில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் மீட்புப் பணி இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அதே போன்று கட்டிட விபத்து ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications