ஜெ.வுக்கு நுரையீரல் அடைப்பை நீக்குவதில் முன்னேற்றம்- செயற்கை சுவாசம் இனி இல்லை! #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு இனி செயற்கை சுவாசம் தேவை இல்லை என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை கூறியது.

லண்டன் மருத்துவர்
பின்னர் நோய்தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதற்கான லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே வரவழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது.

நுரையீரல் அடைப்பு சிகிச்சை
இதனிடையே அப்பல்லோ நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் நுரையீரலில் ஏற்பட்டுள்ள அடைப்பை போக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தது.
|
மாலினி பார்த்தசாரதி
இந்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் இனி தேவை இல்லை என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனைத் தான் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தமது ட்விட்டர் பக்கத்தில் 'மகிழ்ச்சியுடன்' பதிவு செய்திருக்கிறார்.

இன்றைய அறிக்கையில்?
இன்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிடும் செய்திக் குறிப்பில் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் தேவை இல்லை என குறிப்பிடப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications