நிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது ரூ.389 கோடி மோசடி புகார்!
நிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது 389 கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்துள்ளது.
டெல்லி: நிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது 389 கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்துள்ளது.
வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11400 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். அவரை பிடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சர்வதேச போலீஸின் உதவியை நாடியுள்ளது.

இந்த மோசடி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்
டெல்லியிலுள்ள ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ் (ஓபிசி) வங்கியில் 389.85 கோடி நிதி மோசடி செய்ததாக டெல்லி வைர ஏற்றுமதி நிறுவனமான துவர்கா தாஸ் சேத் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளது.
2007-2012 ஆம் ஆண்டில் ஓபிசி வங்கியிலிருந்து பல்வேறு கடன் வசதிகளை பெற்றுள்ள இந்நிறுவனம் 389 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆறு மாதத்திற்கு பிறகே வங்கியானது சிபிஐயிடம் துவர்கா தாஸ் சேத் நிறுவனத்தின் இயக்குனர்களான சப்த் சிங், ரீடா சிங், கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர்களுக்கு எதிராக நிதி மோசடி புகார் அளித்துள்ளது.
துவர்கா தாஸ் சேத் நிறுவனமானது வங்கியில் வழங்கப்படும் லெட்டர்ஸ் ஆஃப் க்ரெடிட் சேவையின் மூலம் பிற நாடுகளில் தங்கம் மற்றும் பிற விலையுயர்ந்த கற்களை போலியான முறையில் பரிவர்த்தனைகள் செய்ததை தற்போது வங்கி கண்டுபிடித்துள்ளது. நீரவ் மோடியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வைர ஏற்றுமதியாளர் மீது மோசடி புகார் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications