For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயபாஸ்கரைத் தொடர்ந்து கொங்குமண்டல 'மணி'க்கு மணி கட்டுகிறது டெல்லி!

Google Oneindia Tamil News

சென்னை: சர்ச்சைக்குரிய அமைச்சர் விஜயபாஸ்கரை வளைத்ததைப் போல முதல்வர் போல செயல்பட்டு வரும் கொங்குமண்டல 'மணி'யான அமைச்சருக்கு மணி கட்டும் வேலைகளை டெல்லி மும்முரமாக்கியுள்ளதாம்.

சசிகலா சமூகத்து அமைச்சர்களுக்குத்தான் பிரச்சனை... நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை என கொங்கு மண்டல அமைச்சர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லை.

கார்டனின் நிதி போக்குவரத்துகளை முழுமையாக கவனித்து வந்தவர் கொங்கு மண்டல 'மணியான' அமைச்சர் ஒருவர்தான். முதல்வருக்கு அடுத்து நான்தான் எனப் பேசி வருகிறார்.

பணவிநியோகம்

பணவிநியோகம்

சட்டசபை தேர்தலில் இவர் பணம் விநியோகித்த அளவுக்கு யாரும் செய்யவில்லை. கொங்குமண்டலத்தில் அதிமுகவுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தார்.

ரூ2,000 கோடி முதலீடு

ரூ2,000 கோடி முதலீடு

இவருடன் வலம் வரும் சேகரமான நபரை தீவிர வளையத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் வேலைகள், அரசு ஒப்பந்தம், தனியார் கல்லூரிகளில் முதலீடு என ரூ2,000 கோடி ரூபாய் வரையில் பணத்தை மணியான அமைச்சர் முதலீடு செய்திருப்பதை ஆதாரத்துடன் சேகரித்து வைத்துள்ளனர்.

ஆவணத்தை காட்டிய டெல்லி

ஆவணத்தை காட்டிய டெல்லி

அண்மையில், டெல்லி சென்ற அதிமுக்கிய பிரமுகரிடம் பேசிய டெல்லி அதிகாரி ஒருவர், எங்கள் அதிகாரிகள் கொடுக்கும் தகவல்கள் எல்லாம் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பல வகைகளிலும் ஆய்வு செய்து வருகிறோம். உங்கள் சமூகத்து அமைச்சர், தேர்தலுக்குப் பிறகு இப்போது வரையில் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார் தெரியுமா? ஆவணங்களைப் பார்க்கிறீர்களா?' எனக் கேட்டிருக்கிறார்.

அதிர்ச்சியில் அதிமுக்கிய பிரமுகர்

அதிர்ச்சியில் அதிமுக்கிய பிரமுகர்

அதிர்ந்து போன அதிமுக்கியப் பிரமுகர் எதையும் சொல்லாமல் மௌனம் காத்திருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் நம்மால் தப்பிக்க முடியாது என்பதால்தான், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு செவிசாய்த்து வருகிறாராம் அதிமுக்கிய பிரமுகர்.

English summary
Delhi sources said that TamilNadu Senior Minister from Gongu region also under surveillance by IT officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X