அரசு செயல்பாடு படு மோசம்.... அரசு நிறுவனங்களால் ரூ. 80,925 கோடி நஷ்டம் - தலைமை கணக்காயர்
முறையாக செயல்படாத அரசு நிறுவனங்கள் மூலம் ரூ. 80,925 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்காயர் திருப்பதி வெங்கடசாமி கூறியுள்ளார்.
சென்னை: கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிதி நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், முறையாக செயல்படாத அரசு நிறுவனங்கள் மூலம் ரூ. 80,925 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்காயர் திருப்பதி வெங்கடசாமி கூறியுள்ளார்.
தமிழக அரசு செயல்பாடு குறித்து தலைமை கணக்காயர் திருப்பதி வெங்கடசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு போதிய கரும்புகள் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிதிநிலைமை மோசமாக உள்ளது என்று கூறினார்.
சர்க்கரை ஆலைகளில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தாததால் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தலைமை கணக்காயர் வெங்கடசாமி தமிழ்நாடு அரசு செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ரூ. 12,756 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் ரூ. 2600 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முறையாக செயல்படாத அரசு நிறுவனங்கள் மூலம் ரூ. 80,925 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. தோட்டக்கலைக்கு தமிழக அரசு காலம்தாழ்த்தி நிதி வழங்கியது. தமிழக அரசின் அலட்சியத்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்காயர்
திருப்பதி வெங்கடசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications