மழையில் தொடங்கி ஆலங்கட்டி மழையோடு முடிந்த அக்னிநட்சத்திரம்
சென்னை: மதுரை மாவட்டத்தில் மழையுடன் ஆரம்பித்த அக்னிநட்சத்திரம் ஆலங்கட்டி மழையுடன் முடிந்தது. இந்த ஆண்டு மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. ஏற்கனவே, மார்ச் முதலே வெயிலின் கொடுமையை அனுபவித்த தமிழக மக்கள், "அக்னி நட்சத்திரத்தின் போது என்ன ஆகுமோ' என அஞ்சினர். ஆனால் மதுரை, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழையோடு அக்னி நட்சத்திரம் துவங்கியது.
அதேநேரத்தில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. சில தினங்கள் மட்டுமே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

கத்திரியின் கொடுமை
கத்திரி முடியப்போகும் தருணத்தில் வெயிலின் கொடுமை உச்சத்துக்கு சென்றது. 109 டிகிரிவரை தொட்டது வெயில். கடந்த மூன்று நாட்களாக மதுரையில் வெயில் அளவு 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அனல் காற்று வீசி, வெளியில் செல்வோரை வறுத்தெடுத்தது. பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடின. முதியவர்கள், குழந்தைகள் அவதிப்பட்டனர். சிலர் வெயிலின் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர்.

மாலையில் மழை
அக்னி நட்சத்திரத்தின் கடைசி நாளான நேற்றும், காலை முதல் கடும் வெயில் கொளுத்தியது. ஆனால், மாலை 5 மணிக்கு மேல் நிலைமை மாறி, மேகங்கள் கூடின; காற்று வீசியது; மழை பெய்யத் துவங்கியது.

கொட்டிய ஆலங்கட்டி
இடியும் மின்னலுமாய் ஆலங்கட்டி மழை கொட்டியது. மூன்று மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 8 மணி வரை பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. வாகனஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

சூறைக்காற்றுடன் மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயில் கடுமையாக அடித்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். நேற்று அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மாலை சுமார் 4 மணி அளவில் பலத்த சூறை காற்று வீசியது. இதில் கிருஷ்ணகிரி நகரில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன.
இதில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சேதமடைந்தது.

உதிர்ந்த மாங்காய்கள்
மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பள வில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, மத்தூர், காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் மா சாகுபடி செய்யப் படுகிறது. தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை வீசிய சூறைக்காற்றால் பல இடங் களில் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் உதிர்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

6 பேர் காயம்
பர்கூர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது பர்கூர் அருகே உள்ள நேரலக்கோட்டை கிராமத்தில் வீசிய பலத்த காற்றால் அங்கு வீடுகளில் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தனின் மகள்கள் தேவி (வயது13), புஷ்பா (13), புனிதா(8), மகன் மோகன்ராஜ் (4) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த டி.வி., மிக்சி உள்ளிட்ட மின் சாதன பொருட்களும் சேதம் அடைந்தது.

இடிந்த மேற்கூரை
இதே போல மற்றொரு வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ராஜேஸ் வரி, மீனா ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மழைக்கு வாய்ப்பு
இதனிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

வெயில் கொளுத்தும்
ஓரிரு இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். மாலை வேளைகளில் இதமான சூழல் நிலவும். அதேநேரத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் வெயில் தாக்கம் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications