அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு திடீர் தடை! ஜாமீனில் வெளிவர முடிவு
திருநெல்வேலி: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி டிரைவர்கள் நியமனத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அமைச்சர், அதிகாரிகளின் நெருக்கடியே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதனிடையே இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாளையங்கோட்டை சிறையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விசாரணை கைதிகளையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் தண்டனை கைதிகளையும் அவர்களது உறவினர்கள் சந்தித்து பேச முடியும். எல்லா நாட்களிலும் வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி உண்டு. அதனால், சிறையில் இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவரது வழக்கறிஞர் தினமும் சந்தித்து பேசி வருகிறார்.
ஜாமீன் மனு தாக்கல்
பொறியாளர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இதுவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. அவரது வழக்கறிஞர் தினமும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடுத்த வாரம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
வார்டன்கள் பேச தடை
இந்நிலையில், சிறையில் உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வார்டன்கள் பேச சிறை நிர்வாகம் திடீர் தடை விதித்து உள்ளது. அதன்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் நெருங்கி பேச வேண்டாம் என்று வார்டன்களுக்கு ரகசிய உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தேவையில்லாமல் ரோந்து சென்று அவரை கண்காணிக்க வேண்டாம் எனவும், அவருக்கு பொருட்கள் எதுவும் வாங்கி கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications