வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: சிக்குகிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி; உதவியாளர் கைதானார்!!
சென்னை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் விரைவில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது,
திருநெல்வேலியைச் சேர்ந்த வேளாண்துறை செயற்பொறியாளராக இருந்தவர் முத்துக்குமாரசாமி. அண்மையில் நெல்லை பகுதியில் வேளாண்துறையில் 7 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

இதனை நேர்மையான முறையில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை முத்துக்குமாரசாமி மேற்கொண்டார். ஆனால் சென்னையில் இருந்து வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்கள் எனக் கூறிக் கொண்ட பலர் முத்துக்குமாரசாமியை தொடர்பு கொண்டு தாங்கள் சொல்லும் நபர்களுக்கே பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறார் முத்துக்குமாரசாமி. இந்த நிலையில் நீங்கள் நியமித்த நபர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொடுத்தாக வேண்டும் என்று புது நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மனமுடைந்த முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இவ்விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நேரடி தொடர்பிருக்கிறது என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசம் இருந்த திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசம் இருந்த வேளாண்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
பின் இந்த வழக்கை கடந்த சில நாட்களாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்களில் ஒருவரான பூவையாவை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் இந்த சம்பவத்தில் விரைவில் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications