சிறையிலிருந்து வெளியில் வந்தார் “அக்ரி” - சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்துப் போட்டார்!
மதுரை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் இன்று பாளையங்கோட்டை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நெல்லையில் வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசுவாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 60 நாட்களுக்கு பிறகு பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து அவர் வெளியில் வந்தார்.

நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமராசாமி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக கைதான முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அவர் நாள்தோறும் கையெழுத்திட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், பாளையங்கோட்டை சிறையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று காலை சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார்.
முன்னதாக, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தினமும் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை நிபந்தனை விதித்திருந்தது.
இதன்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று காலை 10.10 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்து விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி அவர் கையெழுத்து போட்டார். பின்னர் 10.20 மணியளவில் தனது காரில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி புறப்பட்டு சென்றார்.
-
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications