92 வயதில் 84வது கௌரவ டாக்டர் பட்டம்.. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் சாதனை!
92 வயதான எம்.எஸ்.சாமிநாதன் 84 கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
சென்னை: தரமணியில் உள்ள எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனுக்கு சிறப்பு டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.
இதன் மூலம், 92 வயதாகும் இந்தியாவின் வேளாண் மரபியல் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் 84 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்ற சாதனையைப் படைத்துள்ளார். இதில் 24 வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் இருந்து வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களும் அடங்கும்.

எம்.எஸ்.சாமிநாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை குவாலியரில் உள்ள ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கமல் காண்ட் திவிவேதி வழங்கினார்.

டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட சாமிநாதன் தனது ஏற்புரையில், "பசி பட்டினியை முழுவதுமாக ஒழிப்பதே நிலையான விவசாயம்" என்று கூறினார். மேலும், குவாலியர் ஐடிஎம் பல்கலைக்கழகம் 1000 வேளாண் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications