லோக்சபா தேர்தலில் வார்டு அளவில் வாங்கிய வாக்குகளை ஆய்வு செய்கிறது அதிமுக
சென்னை: வார்டுவாரியாக அதிமுக பெற்ற வாக்குகள் ஆய்வு செய்யப்பட்டுவருவதால், பிற கட்சிகளைவிட குறைவான வாக்குகள் பெற்ற வார்டுகள் அடங்கிய பகுதிகளின் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பதவி பறிபோகும் அச்சத்திலுள்ளனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில், 39 தொகுதிகளில் போட்டியிட்ட அ.திமு.க., 37 இடங்களில் வெற்றி பெற்றது. தருமபுரியில், பா.ம.க.,வும், கன்னியாகுமரியில், பா.ஜ.,வும் வெற்றி பெற்றன. இதையடுத்து, அத்தொகுதிக்கான, அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், அமைச்சர் ஆகியோரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டன.

ஒன்றிய செயலாளர் பட்டியல்
கோவையில் அதிமுக வெற்றி பெற்றாலும், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணனைவிட அவர் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்ததால் நகர மேயராக இருந்த அதிமுகவின் செ.மா.வேலுச்சாமியின் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சர், மாவட்ட செயலாளர், மேயர் பதவிகளை தொடர்ந்து, ஒன்றிய, நகர செயலாளர் பதவி பறிப்பு பட்டியல் தயாராகி வருகிறது.

வாக்குகள் ஆய்வு
இதற்காக, மாவட்டந்தோறும், சட்டசபை தொகுதி மற்றும் மாநகராட்சி, நகராட்சி வார்டுகள் வாரியாக பதிவான ஓட்டுகள் விவரம் ஆய்வு செய்யப்படுகின்றன. தருமபுரி மக்களவை தொகுதியில், மேட்டூர் சட்டசபை தொகுதியும், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகள் சேலம் புறநகர் அதிமுக மாவட்ட நிர்வாகத்தின்கீழ் செயல்படுகின்றன.

தருமபுரி தலைவலி
தருமபுரியில் பல வார்டுகளில் பாமகவைவிட, அதிமுக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது. எனவே ஓட்டுகளை விட்டுக்கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை பாய உள்ளது.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் நகராட்சியில், ஓட்டுச்சாவடி 132-ல் அ.தி.மு.க. 352 ஓட்டுகளும், தி.மு.க. 449 ஓட்டுகளும் பெற்றன. தி.மு.க.,வுக்கு, 97 ஓட்டு கூடுதலாக கிடைத்துள்ளது. இதேபோல, கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் மட்டும், 145, 146, 151, 158 ஆகிய ஓட்டுச்சாவடிகளில், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., குறைவான ஓட்டுகளை பெற்றிருக்கிறது.

அச்சத்தில் சேலம் அதிமுகவினர்
சேலத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்களாக இருக்கும் பலரின் வார்டுகளில், தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற்றுள்ளதால், நகர செயலர், சேர்மன், கவுன்சிலர்கள் நடவடிக்கைக்கு உள்ளாகும் பயத்திலுள்ளனர். ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு மற்றும் மேட்டூர் தொகுதிகளில், தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகள், கூடுதல் ஓட்டு பெற்றுள்ளதாக கூறப்படுவதால் அ.தி.மு.க.,வினர் தங்கள் கட்சி பதவி பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications