அதிமுக- பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி? சீமானுடன் மாஜி மேயர் சைதை துரைசாமி தீவிர ஆலோசனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக- பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைப்பது தொடர்பாக தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாஜகவின் ஆலோசனையில் முன்னர் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவுகளை ஒருங்கிணைத்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேற்று இரவு சந்தித்து அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்த கூட்டணியில் புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்டவை இணைந்துள்ளன.

அதிமுக- பாஜக கூட்டணியில் தற்போது நாம் தமிழர் கட்சியை சேர்க்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் எந்த தேர்தல் நடந்தாலும் தனித்துதான் போட்டி என்பதில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக இருக்கிறார். தேர்தலில் வெற்றி தோல்வியை விட, தனித்து போட்டியிடும் கட்சி என்ற பெருமையுடன் தொடர்ந்து அரசியல் செய்ய சீமான் விரும்புகிறார்.

ஆனால் சீமானின் இந்த தனி ஆவர்த்தனம், பிரதான அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக திமுக எதிர்ப்பு வாக்குகளை பிளவுபடுத்துகிறது. இதனால் திமுகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் சீமானை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என போராடுகின்றன.

அண்மையில் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதும் நாம் தமிழர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்தே சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் ரகசியமாக சந்தித்ததாக ஒரு தகவல் பரவியது.

இந்த பின்னணியில், சென்னையில் நேற்று முன்னாள் மேயர் சைதை துரைசாமியை சீமான் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, அதிமுக- பாஜக கூட்டணியில் சீமானின் நாம் தமிழர் கட்சி இணைவதன் மூலம், திமுக ஆட்சி அமைப்பதை வீழ்த்த முடியும் எனவும் இந்த சந்திப்பின் போது சைதை, துரைசாமி, சீமானிடம் விவரித்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளை டெல்லி பாஜக மேலிடத்தின் ஆதரவுடன் ஒருங்கிணைத்தவர்தான் சைதை துரைசாமி. இதனை அண்மையில் பேட்டிகளில் பகிரங்கமாகவே சைதை துரைசாமி தெரிவித்தும் இருந்தார். இந்த நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை கொண்டு வரும் அவரது முயற்சி வெற்றி பெறுமா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+