அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்... எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் சாலை மறியல் !
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்பூர் அருகே தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தையடுத்து முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றுகொண்டார். அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த நகலை சசிகலாவிடம் முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். இதையடுத்து சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஆனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இதனை ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியில் திரண்ட 30க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், அண்ணா சிலையில் கறுப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல் வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications