ஜெயலலிதாவின் அதிர்ஷ்ட தேதியில் லோக்சபா தேர்தல்… கொண்டாடும் அதிமுகவினர்
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள தேதியும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதியும் ஜெயலலிதாவின் அதிர்ஷ்ட எண்கள் என்று அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் ஆறாம் கட்ட தேர்தலில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாடு முழுவதும் மே 16ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேதி அறிவிப்பு அதிமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் ஜோதிட நம்பிக்கை
முதல்வர் ஜெயலலிதா பொறுத்தவரை ஜோதிடத்தில் அதிக ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்... மகம் நட்சத்திரம் கேது ஞானக்காரகன் என்பதால் சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
ராசி, எண், நிறம்
ஒரு காரியம் செய்யும் முன்பாக நாள், நட்சத்திரம், திதி பார்ப்பது மட்டுமில்லாமல் ராசி எண்,ராசி நிறம் பார்ப்பதும் அவர் பழக்கம். முதல்வரின் ராசி எண் 9, 6, 7 எண்ணாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
எம்.ஜி.ஆரின் ராசி எண்
எம்.ஜி.ஆர் ராசி எண்ணாக 7 பயன்படுத்தி வந்தார் இது தற்செயலா அல்லது அவரே முயற்சித்தாரா தெரியாது ஆனால் அவர் வாழ்வில் ராசி எண் 7 பெரும்பங்கு வகித்திருக்கும் அதுபோலவே ஜெயலலிதா கடந்த 2011ம் ஆண்டு மே 16 அன்று (கூட்டுத் தொகை 7) மூன்றாவது முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
வேட்பாளர்கள் அறிவிப்பு
பிப்ரவரி 24-ம் தேதி (கூட்டுத் தொகை 6) புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.
கூட்டுத் தொகை 6
ஜெயலலிதாவின் பிறந்த தேதி எண்ணில் அதாவது ஏப்ரல் 24ல் (கூட்டுத் தொகை 6) தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேதி வருஷம் போன்றவைகளை கூட்டினாலும் 6 வருகிறது.
ஜெய வருடத்தில் ஜெயம்
இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு ஜெய வருடத்தில் பிறக்கிறது. ஜெய வருடம் ஜெயலலிதாவிற்கு ஜெயமாக அமையும் என்கின்றனர் அதிமுகவினர்.
மே 16ல் தேர்தல் முடிவு
தேர்தல் முடிவு .மே 16ம் தேதி (கூட்டுத் தொகை 7) வெளியாகிறது. இது ஜெயலலிதா இம்முறை பதவி ஏற்ற நாள்.. எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண். எனவே முதல்வராக உள்ள ஜெயலலிதா பிரதமராவது உறுதி என்று இப்போதே கூறத்தொடங்கிவிட்டனர் அதிமுகவினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications