அப்பல்லோவில் ஜெ. ... 45வது தொடக்க விழாவைக் கொண்டாட தயாராகும் அதிமுக...!
சென்னை: ஜெயலலிதாவின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியானதை அடுத்து அதிமுகவின் 45ம் ஆண்டு தொடக்க நாள் விழா வரும் 17ம் தேதி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலக வளாகத்தி்ல் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து கொடியேற்றி வைப்பார் என அதிமுக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி 44 ஆண்டுகள் முடிவடைந்து, வரும் அக்டோபர் 17 ஆம் தேதி 45 வது ஆண்டு தொடங்குகிறது. உடல்நலக்குறைவு காரணமாக அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கட்சியின் தொடக்கவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

ஜெயலலிதா தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் கட்சியின் ஆண்டு விழா வரும் 17ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதியன்று காலை 10 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை, தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆருடைய சிலைக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து அதிமுக கொடியினை ஏற்றி வைத்து தொடக்க நாள் மலரை வெளியிட உள்ளார்.
நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் கலந்து கொள்வார்கள் என அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications