மாமூல் கேட்டு ஜவுளிக்கடை உரிமையாளரை ரவுடி போல தாக்கிய அதிமுக கவுன்சிலர்! வீடியோவால் பரபரப்பு
சென்னை: வேளச்சேரியில், துணிக்கடைக்குள் புகுந்து அதன் உரிமையாளரை அதிமுக கவுன்சிலர் ஒருவர் ரவுடியை போன்று, கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
178வது வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் எம்.ஏ.மூர்த்தி (அதிமுக). இவர் கடந்த மாதம் 28ம் தேதி, வேளச்சேரியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு தனது ஆதரவாளர்களுடன் துணி வாங்க சென்றுள்ளார்.
அப்போது, துணிக்கு பணம் கொடுக்காமல், கடை உரிமையாளரிடமே பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. முறையாக உரிமம் பெற்று கடை நடத்துவதால், தேவையில்லாமல் ஏன் பணம் தர வேண்டும் என்று கடை உரிமையாளர் கேட்டதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த (!) மூர்த்தி, அந்த கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கியுள்ளார். அங்கிருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உடைக்க முற்பட்டார். கவுன்சிலரோடு வந்திருந்த ஒரு நபர்தான், அவ்வப்போது, மூர்த்தியை பிடித்து வைத்து, நிலைமை கைமீறாமல் பார்த்துக்கொண்டார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மூர்த்தி இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications