விஜய்க்கு என்னங்க குறை? எவனவனோ முதலமைச்சராவேன் என சொல்லும் போது அவர் ஏன் வரக்கூடாது? -செல்லூர் ராஜூ

Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் விஜய்க்கு என்ன குறை என்றும் எவனவனோ முதலமைச்சராவேன் என சொல்லும் போது அவர் ஏன் வரக்கூடாது? எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னை கேட்டால் விஜய் அரசியலுக்கு வரட்டும் வளரட்டும் என்று தான் வாழ்த்துவேன் என்றும் அதிமுகவுக்கு விஜய் போட்டியே கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

 AIADMK Ex Minister Sellur Raju said that Actor Vijay should come to politics,

நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத சூழலிலும்,அது தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. 234 தொகுதிகளில் இருந்து தலா 3 மூன்று மாணவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று அவர் விருந்தளித்து ஊக்கத் தொகை வழங்கியது அரசியல் கட்சிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் வந்தால் தவறே இல்லை என்றும் 13 மணி நேரம் ஒரே இடத்தில் நின்று சொந்தப்பணத்தை செலவழித்து மாணவர்களுக்கு விஜய் உதவி செய்ததை போல் வேறு யார் செய்திருக்கிறார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வினவினார்.

 AIADMK Ex Minister Sellur Raju said that Actor Vijay should come to politics,

அதிமுகவுக்கு நடிகர் விஜய் போட்டியாக வர மாட்டார் என்றும் அதிமுகவுக்கு இருக்கும் ஒரே போட்டி திமுக தான் எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார். அடுத்த தலைமுறை அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை அதிமுக -திமுக இடையே மட்டும் தான் அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் சரி போட்டி நிலவும் என்றும் வேறு யார் வந்தாலும் போட்டியாக வர முடியாது எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+