அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு - சசிகலா நீக்கப்படுவார்?
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செப்டம்பர் 12ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு செப்டம்பர் 12ல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 12ஆம் தேதி காலை 10.35 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் நீக்கப்பட்டு செங்கோட்டையனை நியமித்தார் சசிகலா. ஆனால் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் அழைப்பிதழ்களுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூடும் பட்சத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நீக்கும் பட்சத்தில் சசிகலாவின் நியமனமும், தினகரனின் நியமனமும் செல்லாததாகிவிடும்.
யார் தலைமையில் பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார்களோ அதை நிர்வாகிகள் கூடி மீண்டும் சசிகலாவை நீக்க முடிவு செய்துள்ளனர். எனவே அதிமுக பொதுக்குழுவில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் நிர்வாகிகளும் இந்த பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுக்குழு கூடும் வரைக்கும் டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களும் என்ன செய்யப்போகிறார்களோ என்று அதிமுக தொண்டர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications