சசிகலாவுக்கு எதிர்ப்பு.. ஓ.பன்னீர் செல்வத்துக்கு மாஜி எம்.எல்.ஏ. சிங்காரம் ஆதரவு
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தெரிவித்துள்ளார்.
தர்மபுரி: மொரப்பூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் சிங்காரம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு திடீரென ஜெயலலிதா சமாதியில் மவுன புரட்சியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் ஆதரவு விஸ்வரூபமெடுத்து வருகிறது. முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று நேரில் சந்தித்த சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிங்காரம் அதிமுக-வில் 18 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராக பொருப்பு வகித்தவர். மூன்று முறை மொரப்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மேலும், 2001 முதல் 2006 வரை ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சேர்மன் பதவியும் வகித்தவர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பிமுனுசாமி தலைமையில் ஒ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications