கடையநல்லூரில் அதிமுக-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொண்டர்கள் மோதல்
தென்காசி: கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் அபூபக்கர் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் ஷேக்தாவுத் போட்டியிடுகிறார். இன்று கடையநல்லூரில் வாக்குபதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்கு சாவடி மையம் அருகே பலகட்சிகளின் ஆதரவாளர்கள் வாக்களிக்க செல்பவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அதிமுக-இ.யூ.மு.லீக் கட்சி பிரமுகர்களுக்குமிடையே தீடீர் என வாக்குவாதம் ஏற்ப்பட்டு மோதலாக மாறியது. இருகட்சியினரும் சாலையில் மோதிக்கொண்டனர். இதனால் வாக்களிக்க வந்த பெண்கள் ஒதுங்கி சென்றனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

அததேநேரம், தென்காசி,கடையநல்லூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இன்று காலைமுதலே விறுவிறுப்பான வாக்குபதிவு தொடங்கி நடந்து வருகிறது. கடையநல்லூர் தொகுதியில் கடையநல்லூர் ஆண்கள் பள்ளியில் முதியவர்கள், மாற்று திறனாளிகள், பெண்கள் என அனைவரும் திரண்டுவந்து வேகமாக் வாக்களித்து வருகின்றனர்.
கடையநல்லூர் தொகுதியில் மதியம் 12 மணி நிலவரப்படி 39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
தென்காசி தொகுதியில் மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5 வாக்கு சாவடிகள் உள்ளது.மழையின் காரணமாக இந்த வாக்கு சாவடி செல்லும் பகுதிகள் சேரும் சகதியுமாக உள்ளதையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரளாக வந்து வாக்களித்து வருகின்றனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications