தினகரனை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களும் கைதா? எச்.ராஜா பரபரப்பு தகவல்
சென்னை: பாஜகவின் தமிழ் மாநில தலைவரான தமிழிசை மற்றும் தேசிய செயலாளர் எச்.ராஜா இருவரும் தமிழக அரசியலில் நடைபெறப்போவதை முன்கூட்டியே பூடகமாக சொல்லக் கூடியவர்கள் என்று பெயர் எடுத்துள்ளனர்.
தமிழக அரசையே, பாஜகதான் நடத்தி வருகிறது என்பதற்கு இவர்களின் கருத்துக்களே சான்று என்பது தமிழக கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில், டிடிவி தினகரன் டெல்லியில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நிலையில், எச்.ராஜா, பேஸ்புக்கில் தொடர்ச்சியாக சில கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார்.
அடுத்து அமைச்சர்களா?
"தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது..அடுத்து அதிமுக அமைச்சர்கள் ???" என ஒரு போஸ்டில் கருத்து தெரிவித்துள்ளார் ராஜா.
கிண்டல்
பொதுசெயலாளர் பெங்களுரு சிறையில்!!! துணை பொதுசெயலாளர் திஹார் சிறையில் !!! அருமையான இயக்கம் அதிமுக !!! , என்று கிண்டல் செய்துள்ளார்.
திருப்பங்கள்
"தினகரன் கைது..தமிழ்நாட்டில் இனி பல அரசியல் திருப்பங்கள் காத்திருகிறது" என்றும் ஒரு போஸ்டில் தெரிவித்துள்ளார் எச்.ராஜா. மேலும் தமிழ் ஒரு சிறந்த மொழி என பிரதமர் மோடி பேசி, 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியையும் எச்.ராஜா ஷேர் செய்துள்ளார்.

பாஜக தலைமை மனநிலை
தினகரன் கைது நடவடிக்கைக்கு பிறகு எச்.ராஜா கூறியுள்ள இந்த தொடர் கருத்துக்கள் பாஜகவின் மனநிலையை பிரதிபலிப்பவையாக உள்ளதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications