“சொன்னீங்களே, செஞ்சீங்களா?” ... அதிமுக புகார் மனு... விசாரிப்பதாக லக்கானி தகவல்
சென்னை: தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் திமுக விளம்பரங்களைத் தடை செய்யக்கோரி, அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
‘சொன்னீங்களே செஞ்சீங்களா?' என்ற தலைப்பில் அதிமுக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை சுட்டிக் காட்டி, தனியார் தொலைக்காட்சிகளின் திமுகவின் தேர்தல் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த விளம்பரங்கள் ஆளும் அதிமுக அரசிற்கும், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக, அந்த விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், "தொலைக்காட்சிகளில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் விளம்பரங்களை வெளியிடுவதை தடுக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றி இணை தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதற்கிடையே, நாளை மறுநாள் தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. அப்போது வேட்புமனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கான நடைமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து ராஜேஷ் லக்கானி கூறுகையில், "ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் போட்டியிடலாம். ஒவ்வொரு தொகுதியிலும் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஒன்றில் பிழைகள் இருந்தால் மற்றொரு வேட்பு மனு எடுத்துக்கொள்ளப்படும்.
பொது தொகுதியாக இருந்தால் வேட்பாளர் ரூ.10 ஆயிரம் டெபாசிட்டும், தனி தொகுதியாக இருந்தால் ரூ.5 ஆயிரமும் டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.
வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர் எத்தனை வாகனத்தில் வேண்டுமானாலும் ஊர்வலமாக வரலாம். ஆனால் அந்த வாகனத்திற்கான செலவு அனைத்தும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் வேட்பாளரின் வாகனத்தையும் சேர்த்து 3 வாகனத்துக்கு தான் அனுமதி. தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குள் செல்ல வேட்பாளரையும் சேர்த்து 5 பேருக்கு தான் அனுமதி.
வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் அதிகாரி வேட்பாளர்களிடமிருந்து மனுவை பெறும்போது எழுந்து நின்று அல்லது உட்கார்ந்து கொண்டு தான் வாங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. வேட்புமனுவை வாங்கும்போது தேர்தல் அதிகாரி எழுந்து நிற்பதும், உட்காருவதும் அவரவர் விருப்பம்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், விசாரித்து புதிய வாக்காளர் பட்டியல் அவ்வப்போது அரசியல் கட்சியினருக்கு அளித்து வருகிறோம்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications